அக்காவை நடுங்க வைத்த தங்கையின் கணவர்..!
சென்னை கிண்டியில், வாஷிங் மெஷின் ட்யூப்பால் மனைவியின் கழுத்தை நெறித்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கிண்டி, மடுவின்கரை மசூதி காலனியை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 5 வயதில் பூஜா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இருவரும் அதேப் பகுதியில் தோசை மாவு விற்கும் தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆந்திராவில் வசிக்கும் உஷாவின் சகோதரி நளினி, செல்ஃபோனில் தனது தங்கை உஷாவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது போனை எடுத்த உஷாவின் கணவர் பிரசாத், உஷா தூங்குவதாக கூறியுள்ளார். இதனால் அப்போது போனை வைத்த நளினி நேற்று மீண்டும் போன் செய்துள்ளார்.
அப்போது, உஷாவின் செல்ஃபோனை எடுத்த ஒருவர், உஷாவிற்கு உடம்பு சரியில்லாதால் மடுவின்கரையில் இருப்பதாகவும், அவரது கணவர் குழந்தையுடன் சித்தூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த நளினி, கிண்டியில் உள்ள தனக்கு தெரிந்த நண்பரிடம் விவரத்தை கூறி தங்கையின் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அதன்படி அவர்கள் உஷா வீட்டுக்கு சென்றுப் பார்த்தனர். அங்கு உஷா, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை.