ரஜினியின் பேச்சால் பொங்கியெழுந்த குஷ்பு..!
கருணாநிதி போட்டோவை வைச்சிக்கிட்டு இப்படியா..? ச்சே, வெட்கக்கக்கேடு… ரஜினியின் பேச்சால் பொங்கியெழுந்த குஷ்பு..!
அட லூசுப்பசங்களா ரஜினிகூட ஏற்கெனவே நடிச்சு முடிச்சிட்டேண்டா… எனக்கு இது புதுசு இல்ல. ஏண்டா முட்டாள்தனத்தை நிரூபிக்கிறீங்க என குஷ்பு கொதித்தெழுந்துள்ளார். சரி ஏன் இப்படிக் கொதிக்கிறார் குஷ்பு..?
‘’ஒரு பெண்ணை நடத்தை கெட்டவள் என பரப்பிவிட்டு, அவள் நல்லவள் என்று தெறிந்ததும் இல்லை இல்லை நான் சொல்வதுதான் சரி, அவள் அப்படித்தான் என்று வாதிடுவது போல் உள்ளது உங்கள் வாதம்.. சரியின் பக்கம் நிற்க்க கற்றுக்கொள்ளுங்கள்’’என முன்பு குஷ்பு போட்ட ட்விட்டுக்கு கருத்து தெரிவித்து இருந்தார் ஒருவர்
அதற்கு பதிலளித்த குஷ்பு, ‘’நீங்கள் ஒரு பெண்ணைப் பற்றி உதாரணத்துக்கு கூறுவது பொருத்தமற்றது மற்றும் வெட்கக்கேடானது. ஒரு ஆண் கேரக்டரை கூற முடியாதா? சிறந்த தலைவரான கலைஞர் படத்தை உங்கள் சமூகவலைதள பக்கத்தில் முகப்பு புகைப்படமாக வைத்துக் கொண்டு இப்படிக் கேட்பது இன்னும் வெட்கக்கேடானது’எனக் கொந்தளித்து விட்டார் குஷ்பு.