8 லட்சம் முட்டைகளுடன் அந்தமான் பறக்கும் ‘கல் நண்டு’..!
கோடியக்கரையில் இருந்து 8 லட்சம் முட்டைகளுடன் கல் நண்டு அந்தமானுக்கு விமானத்தில் செல்கிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் நடைபெற்று வருகிறது. இங்கு நாள்தோறும் மீன், நண்டு, இறால் வகைகள் அதிகளவில் கிடைக்கிறது. இந்த நிலையில் நேற்று கோடியக்கரையில் மீனவர் வலையில் மூன்று கிலோ எடை கொண்ட ஒரு பெரிய கல் நண்டு கிடைத்தது. . அந்த நண்டை சோதனை செய்ததில் குஞ்சுகள் பொறிப்பதற்காக சுமார் 8 லட்சம் முட்டைகள் இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக இந்த கல்நண்டை ஒரு பெட்டியில் தண்ணீரை நிரப்பி வென்டிலேட்டர் பொருத்தி விமானத்தில் அந்தமான் மீன் குஞ்சு பொரிப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. . நண்டை அந்தமான் கொண்டு சென்று குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து ஒரு வாரத்தில் நண்டு குஞ்சுகள் பொரித்தவுடன் குஞ்சுகளை பத்திரமாக கடலில் கொண்டு போய் விடுவார்கள் என மீனவர்கள் தெரிவித்தனர்.