நடிகர் அர்ஜுன் இயக்கும் அடுத்த திரைப்படம்..!

 நடிகர் அர்ஜுன் இயக்கும் அடுத்த திரைப்படம்..!

தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என அழக்கப்படுவர் அர்ஜுன் சர்ஜா. 1981 ஆம் ஆண்டு வெளிவந்த சிம்ஹடா மரி சைன்யா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகராக திரையுலகிற்குள் வந்தார். அதற்கு பின் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த நன்றி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் தடத்தை பதித்தார்.

1992 ஆம் ஆண்டு சேவகன் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். இதுவரை 12 திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நெஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை காலை 10.08 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

அண்மையில் துருவ சர்ஜா நடிப்பில் வெளியான மார்டின் திரைப்படத்திற்கு கதை எழுதியுள்ளார் அர்ஜுன். அது மட்டுமல்லாது அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இது தவிர்த்து தீயவர் குலைகள் நடுங்க மற்றும் அகத்தியா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...