ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்..!

 ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்..!

சென்னை -கன்னியாகுமரி இடையே ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு வரும் 10, 12ம் தேதிகளில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறுமார்க்கமாக வரும் 11, 13ம் தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் (தேவையின் பேரில் ரயில்கள்) இயக்கப்படுகிறது. தொடர்ந்து வரும் பண்டிகை காலங்களில் பயணிகளின் கூடுதல் கூட்டத்தை குறைக்கும் நோக்கில். சென்னை எழும்பூர் மற்றும் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி இயக்கப்படும்.

ரயில் எண்.06193 / 06194: சென்னை எழும்பூர் கன்னியாகுமரி சிறப்பு ரயிலில் 10 ஸ்லீப்பர் வகுப்புப் பெட்டிகள், 6 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் இரண்டு லக்கேஜ் கம் பிரேக் வேன்கள் இருக்கும்.

ரயில் எண்.06193 : சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் அக்டோபர் 10 மற்றும் 12 ஆம் தேதிகளில் இரவு 11. 45 ( 23.45) எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.20 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும். மறுப்டியும், ரயில் எண்.06194 என்ற பெயரில் அதே ரயில். கன்னியாகுமரி சென்னை எழும்பூர் இடையே அக்டோபர் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து பிற்பகல் 2.45க்கு ( 14.45) மணிக்குப் புறப்பட்டு சென்னையை சென்றடையும். மொத்தம் நான்கு சேவைகள் ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

இந்நிலையில் வாரஇறுதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக அடுத்த ஒரு மாதத்திற்கு தாம்பரத்தில் இருந்து கோவைக்கும் வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. ஆயுத பூஜை மற்றம் தீபாவளியை முன்னிட்டு இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும் ஞாயிறுகளில் கோவையில் இருந்தும் இந்த ரயில் புறப்படும்.

வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 6 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருபாத்திபுலியூர் (கடலூர்), சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், ஒட்டன்சந்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர்(கோவை) ஆகிய ரயில் நிலையங்களில் நின்று கோவை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 8.10க்கு சென்றடையும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை காலை கோவைக்கு சிறப்பு ரயில் சென்றடையும். மறுமார்க்கமாக ஞாயிறு அன்று இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் திங்கள் அன்று மதியம் 12.30க்கு இந்த ரயில் தாம்பரம் வரும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...