சிம்லாவில் லேசான நிலஅதிர்வு!
ஹிமாசலப் பிரதேசம் தலைநகர் சிம்லாவில் திங்கட்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஹிமாசலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் இன்று காலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 எனப் பதிவாகியுள்ளது. சிம்லா நகரின் வடகிழக்கே 10 கி.மீ தொலைவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சரியாக 5.18 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சிம்லாவில் லாகுல், ஸ்பிதி மாவட்டத்தில் 2 முறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.