டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு புகார் குறித்து விசாரணை தொடங்கியது!

 டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு புகார் குறித்து விசாரணை தொடங்கியது!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக அதிகாரிகள் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

   கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்(1606), கீழக்கரை (1608) ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் 40 பேர் தரவரிசையில் மாநில அளவில் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். இதுகுறித்து தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

   இதன் தொடர்ச்சியாக கடந்த 2017-18ம் ஆண்டுக்கான குரூப் 2ஏ தேர்விலும் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் இருந்து தேர்வு எழுதியவர்கள் 30க்கும் மேற்பட்டோர் முதல் 50 இடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. 

குரூப் 4 தேர்வில் முறைகேடு? – சர்ச்சையில் 2 தேர்வு மையங்கள்

இதையடுத்து, தேர்வு முறைகேடு புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

    குரூப் 4 தேர்வு, 2017-18ம் ஆண்டின் குரூப் 2 தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்ய இருப்பதாக டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். மேலும், வெளிமாவட்ட தேர்வர்கள் எத்தனை பேர் ராமநாதபுரத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்என்றும்  குற்றச்சாட்டு எழுந்துள்ள மையங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விலும் முறைகேடு?

  கடந்த 2017-18ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வுக்கான பணிகளில் பெரும்பாலானவை ஏர்கனவே நிரப்பப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...