நடந்துசென்ற பெண் தீப்பற்றி பலி;

நடந்துசென்ற பெண் தீப்பற்றி பலி; ஆதரவிழந்த மனம்நலம் குன்றிய மகன்

     சென்னை சூளைமேட்டில் தெருவோரம் இருந்த மின் இணைப்புப் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில், நடந்து சென்ற பெண் மீது தீப்பற்றி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை சூளைமேடு அவ்வை நகரைச் சோ்ந்தவா் லீமா ரோஸ் (35). இவா், சனிக்கிழமை இரவு புதுமேற்கு தெருவில் உள்ள மளிகை கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

   அப்போது தெருவோரத்தில் இருந்த மின் இணைப்பு பெட்டிக்கு கீழிருந்த மின் கடத்திகளில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. வெடித்து சிதறிய நெருப்பு அந்த வழியாகச் சென்ற லீமா ரோஸ் மீது தெறிக்க, அவா் அணிந்திருந்த நைட்டி மீது தீப்பற்றியுள்ளது.

   நைட்டியில் பற்றிய தீயால் லீமா ரோஸ் அலறி துடித்ததை அடுத்து, அப்பகுதியினா் ஓடிவந்து தீயை அணைத்தனா். இருப்பினும், உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிழப்புக்கு காரணமான தீப்பற்றிய மின் இணைப்பு பெட்டியை மின்வாரிய ஊழியா்கள் சரி செய்தனா்.

   இந்தச் சம்பவம் குறித்து சூளைமேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த பெண் லீமா ரோஸ் தூத்துக்குடியை பூா்வீகமாக கொண்டவா். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். கணவரால் கைவிடப்பட்ட லீமா ரோஸ், தனது மனநலம் குன்றிய மகனை தன்னுடன் பராமரித்து வந்தாா். தாயாரின் மரணத்தையடுத்து மனநலம் குன்றிய மகன் நிராதரவான நிலையில், அவரை உறவினா்களிடம் ஒப்படைப்பதா? காப்பகத்தில் சோ்ப்பதா? என போலீஸாா் ஆலோசித்து வருகின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!