அப்பா!
அப்பாவுக்கு ஓர் கடிதம்
அப்பா
தனிப் பெரும் ஆளுமை
தன்னிகரில்லா
தலைமகன்
ஆசிரியரின் மகள் என்பதில்
அசையா கர்வமெனக்கே
அன்பை சொல்லா
அரசனவன்
தனது பள்ளியில்
எனது படிப்பை
பாதையாக்கினாய்
பாங்குடன்
என்ன சொல்லி
என்னை வகுப்பில் விட்டாய்
படிக்காது போனால்
கண்ணை விட்டு
தோலிரிக்க சொன்ன
அரக்கனவன்
மூன்று பிள்ளைகளையும்
மூச்சாக சுவாசித்தாய்
முழுதாய் நேசித்தாய்
வெளிகாட்டாமலே
இளமைத்திமிரில்
ஈன்ற உன்னை மறந்து
இதயம் நெருங்கி போனதால்
சின்னாபின்னமாகியதோ வாழ்க்கை
ஆவணக்கொலை செய்திருக்கலாம்
ஆனால்
அன்றாடம் கொலைகளத்தில்
நான்
இறுதிகாலமும்
இயலா பொழுதும்
இத்தனை கொடுமை என்பதை
ஈட்டியாக குத்தி சொல்லாமல் சொல்லி விட்டாய்
இன்றும்
சுயநலவாதியாக
மகளின் வெளிச்சத்திற்கு
இத்தனை தூரம்
பள்ளி முடிந்து வரும் போது
எனனை அழைக்க யார்
இருக்கா
துரோகம் செய்த போதும்
தூக்கி போடாமல்
துணையாய் நின்றாய்
இன்று நான் வாங்கும்
ஊதியம் நீர் இட்ட பிச்சை
உலகம் என்னால்
உன்னை ஒதுக்க
பதினான்கு ஆண்கள்
பாராமுகமாக
நான் கொன்ற பாசம்
என் மகள் வென்று விட்டாள்
தனியாக நான் வந்தால்
என் மகள் (கும்பகோணம்)
எங்கே என்ற உயிர்
இனி இல்லை
வீறு நடை நடந்துபடைத்தாய்
அதிகாரத்தை ஆட்டி படைத்தாய்
நின் பிரதிபலிப்பே
என்னையும் வினவச்செய்தது
உங்கள் ஆத்மா
உயர்வில் இளைப்பாறட்டும்
மகளை எச்சில் படுத்தும்
பாரில்
பத்தடி தள்ளியே பாசம் வைத்தாய்
செய்த தவற்றிற்காக
மன்னிப்பு கேட்கின்றேன்
மனதார மன்னியுங்கள்
இருந்த வரை கேட்கவில்லை
இறுதியில் கேட்கின்றேன்
கலைஞர் வாழ்வு
எத்தனை கொடியது
நடிக்க தெரியாத என்னையும்
நடிக்க வைத்து இருக்கிறது
சந்தோஷத்தை சத்தம் இல்லாமல்
சந்திக்கலாம்
துக்கத்தை எப்படி
தூக்கி போட முடியும்
ஊருக்காக ஆடும் கலைஞன்
தன்னை மறந்தான்
தன் கண்ணீர் மூடிக்கொண்டு
இன்பம் கொடுப்பான்
இந்த வரிகளின் வீரியம்
உணர்ந்தேன் இன்று
வாழ்வு எத்தனை கொடியது
வலியோடு சிரிக்க முடியுது
தலைமகளாய் பிறந்து
மறமேறி பெயர்த்தியாய்
பணத்தில் படுத்த எனக்கு
இருபது வருடம் உன்மகளாய்
பசி என்ற வார்த்தை கூட அறியாமல்
இருபதுக்கு பின்
பணமும்
பசியும்
எத்தனை வலியது என்று
எண்ணற்ற நாட்கள் சொல்லி சென்றன
இன்று மகளாய் மண்டியிடுகிறேன்
மன்னித்துவிடுங்கள்
மனதார
இறுதியில் சேவை செய்யும்
பாக்கியம்
இறுதி நேரத்தில் இல்லாமல்
இன்றும் சுயநலமாக
சூழ்நிலை கைதியாக
மன்னியுங்கள்
அப்பா
உன் வடிவின் சாயலாய்
வரமாய்
நான் வாழ்க்கை
அர்பணித்து
மன்னிப்புடனும்
வலியுடனும்
மருந்தில்லா காயத்தை
மாற்ற முயற்சியுடன்
மகள் எனும் சாபமே
ஆன்மா நித்திய இளைப்பாற்றி தரட்டும்