என்ன சொல்கிறது தமிழக வானிலை நிலவரம்!
Chennai Rains: லைட்டா காட்டுமா? அடிச்சு நொறுக்குமா? என்ன சொல்கிறது தமிழக வானிலை நிலவரம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்களை இங்கே காணலாம்.
இந்தியாவில் பருவமழையை அதிகம் நம்பியிருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு. ஓராண்டில் பருவமழை பொய்த்துப் போனால் தமிழகத்தின் மழையின் அளவு வெகுவாக குறைந்துவிடும்.
தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மழையில் 47% வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கிறது. இதை தவிர்த்து புயல், காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை பெய்கிறது.
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை அபரிமிதமாக வாரி வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ஒரே நாளில் 1,000 மி.மீ மழை பதிவாகி நூற்றாண்டு சாதனையை நிகழ்த்தியுள்ளது.
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை அபரிமிதமாக வாரி வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ஒரே நாளில் 1,000 மி.மீ மழை பதிவாகி நூற்றாண்டு சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதையடுத்து தொடங்கிய வடகிழக்கு பருவமழையும் நல்ல மழைப்பொழிவை அளித்துள்ளது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை நகரில் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும்.
வரும் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக 20ஆம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வரும் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக 20ஆம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.