ஜெயலலிதாவின் பிறப்பு பற்றித் தெரியுமா?

 ஜெயலலிதாவின் பிறப்பு பற்றித் தெரியுமா?

 “தி குயின்” ஜெயலலிதா!!

    இணையத்தில் வெளியாகியுள்ள “தி குயின்” தொடர் ஜெயலலிதா வாழ்க்கை தொடர்பான சுவாரஸ்யத்தைக் கிளப்பியுள்ளது. இந்தச் சமயத்தில் சமயம் தமிழ், ஜெயலலிதா வாழ்க்கையைச் சிறிய செய்தித் தொகுப்புகளாக இன்று முதல் தினமும் வழங்குகிறது.

 முன்னாள் தமிழ்நாடு முதல்வர், தலைவி என்றும் அம்மா என்றும் அதிமுக தொண்டர்களால் அழைக்கப்படும் ஜெயலலிதா  வாழ்க்கை தொடர்பாக இணையத் தொடர் ஒன்று “தி குயின்” என்ற பெயரில் வெளியாகி எம்எக்ஸ் பிளேயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சூழலில் பலரின் தேடுதல் ஜெயலலிதாவின் இளமைப் பருவம் குறித்தே உள்ளது.

  கோமளவல்லி என்ற இயற்பெயரைக் கொண்டுள்ள ஜெயலலிதா இரும்பு பெண்மணி என்ற பெரும்பான்மையினரால் அடையாளப்படுத்தப்படுகிறார். ஜெயலலிதாவின் பிடிவாத குணத்திற்கு, அவரின் சிறிய வயது சூழலே காரணம் என உறவினர்கள் கூறுகிறார்கள். இதை ஆராயும் நோக்கில், அவரின் பிறந்து வளர்ந்த இடத்தின் விவரத்தைத் திரட்டினோம்.


   ஜெயலலிதா 1948ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள மைசூர் மாவட்டம், பாண்டவாபுரா தாலுகா மேலோகோடி என்ற இடத்தில் பிப்ரவரி 24இல் பிறந்தார். அப்பா ஜெயராமன். தொழில் வழக்குரைஞர். அம்மா வேதவல்லி.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...