83-வது வயசு கம்மிங்.. கேட்டுச்சா போ..போ.. ஏழுமலை வெங்கடேசன்
வஹிதா ரெஹ்மான்.1955-ல நம்மூர் எம்ஜிஆரோட அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடிவிட்டு இந்தி திரையுலகில் புகுந்து கனவுக்கன்னியாக உலாவந்த செங்கல்பட்டு அம்மணி…
பியாசா, கைடு, ஆப்கி கசம், ராம் அவுர் ஷியாம்ன்னு இந்தி முன்னனி மூவேந்தர் ஸ்டார்களான ராஜ்கபூர், திலீப்குமார், தேவ் ஆனந்த் உள்பட பல டாப் ஸ்டார்களோடு ஜோடி போட்டு காவியத்துவம் வாய்ந்த பாத்திரங்களுக்கு உயிரூட்டியவங்க..
ஜூனியர்களான அடுத்த தலைமுறை தர்மேந்திரா ராஜேஷ்கன்னா, அமிதாப்பச்சன் போன்றவர்களின் படங்களிலெல்லாம் நாயகியா நடிச்சவங்க. கமலோடே விஸ்வரூபம் பார்ட் 2 கூட தலைகாட்னாங்க.
1972 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ உள்பட 6 விருதுகளை பெற்றவங்க..
82 வயசுல அம்மணி பயங்கர சுறுசுறுப்பா இருக்காங்க. ஃவைல்ட் லைப் போட்டோகிராஃபில புகுந்து அமர்க்களம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. கடலுக்குள் அடியில போய் மீனுங்களுக்கு டஃப் குடுக்க, அடுத்த படியா .ஸ்கூபா டைவிங் வேற அடிக்கப் போறாங்களாம்..
இதெல்லாம் ஸ்டூடியோவுக்குள்ளயோ, ஏதோ கிராபிக்ஸ்ல முப்பது பேரை அடிக்கிற பம்மாத்து வேலையா என்ன?
எய்ட்டி பிளஸ் லேடி ஸ்டார்லாம் இன்னொரு பக்கம் எவ்ளோ ஸ்டைலா, அதகளம் பண்ணிகிட்டு இருக்காங்க.. இங்க என்னடான்னா,?