வரலாற்றில் இன்று – 18.12.2019
நா.பார்த்தசாரதி
தமிழ் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களை கொண்டுள்ளார்.
இவர் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். 1983ஆம் ஆண்டு இவர் எழுதிய சாயங்கால மேகங்கள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்கள் என்ற நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் பல நூல்களை எழுதியிருக்கிறார்.
சாகித்திய அகாதமி, கம்பராமாயணத் தத்துவக் கடல் போன்ற பல விருதுகளைப் பெற்ற நா.பார்த்தசாரதி 1987ஆம் ஆண்டு மறைந்தார்.