“சுனிதா வில்லியம்ஸ்” பூமி திரும்புவதில் சிக்கல்..!

 “சுனிதா வில்லியம்ஸ்” பூமி திரும்புவதில் சிக்கல்..!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் ஜூன் 5ம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார்.  அவருடன் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் பயணம் மேற்கொண்டார்.

ஜூன் 6ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற நிலையில்  9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தினர்.இந்நிலையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.

விண்வெளி மையம் சென்ற இருவரும் திட்டமிட்டபடி ஜூன் 22 ஆம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.  ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில் நுட்பக் கோளாறுகள் காரணமாக பூமி வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  சுனிதா வில்லியம்ஸை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா கோரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...