கவனத்தை ஈர்க்கும் ‘கண்ணப்பா’ டீசர்..!

 கவனத்தை ஈர்க்கும் ‘கண்ணப்பா’ டீசர்..!

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்துள்ள கண்ணப்பா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஏகப்பட்ட மல்டி ஸ்டார் நட்சத்திரங்கள் தான்.

டீசரில் ஒரு சின்ன டீசராகவே அவர்கள் வந்து சென்றாலும், அந்த காட்சியை பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் அந்த டீசரை அதிக அளவில் பார்த்து வருகிறது. சிவனுக்கு தனது கண்களையே பிடுங்கி கண் கொடுத்த கண்ணப்ப நாயனார் வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று தான். சிவ பக்தரான கண்ணப்பாவை வைத்து இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். ஆனால், இந்த படம் கண்ணப்பா கதை போலவே இருக்குமா? அல்லது வேறு விதமாக ஃபேண்டஸி கலந்து உருவாக்கி இருக்கிறாரா என்பது படம் வந்தால்தான் தெரியும்.

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்துள்ள கண்ணப்பா படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஷ்ணு மஞ்சுவுடன் அவருடைய அப்பா மோகன் பாபுவும் நடித்துள்ளார். அதிக பொருட்செலவில் இந்தத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

மேலும், இந்த படத்தில் கேமியோ ரோலில் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். அக்ஷய் குமார் சிவனாக நடித்துள்ளார். மோகன்லால் மற்றும் பிரபாஸ் வரும் காட்சிகள் டீசரில் தெறிக்கின்றன. 3 பேரையும் முழுதாக காட்டாமல் பாதி ஸ்க்ரீனில் படு பில்டப்புடன் மட்டுமே காட்டியுள்ளனர்.

கவின் நடித்த ஸ்டார் படத்தில் ஹீரோயினாக நடித்த ப்ரீத்தி முகுந்தன் இந்த படத்தில் விஷ்ணு மஞ்சுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வில் அம்பு வைத்துக் கொண்டு கவர்ச்சியான உடையில் பறந்து பறந்து அவர் சண்டை போடும் காட்சிகள் எல்லாம் டீசரில் இடம்பெற்றுள்ளன. மேலும், நடிகை காஜல் அகர்வாலின் பாதி முகம் மட்டும் காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கண்ணப்பா கதை, அக்‌ஷய் குமார், மோகன்லால், பிரபாஸ், மோகன் பாபு, சரத்குமார் என விஷ்ணு மஞ்சுவுக்காக பல பிரபலங்கள் நடித்து கொடுத்திருப்பது எல்லாம் ஓகே தான். ஆனால், டீசராக பார்க்கும் போது மேக்கிங் ரொம்பவே மோசமாக உள்ளது. இதற்கு இந்தியில் தயாரிக்கப்பட்ட மகாதேவ், மகாபாரதம், ராமாயணம் போன்ற டிவி சீரியல்களே தரமாக இருக்கும் என தெரிகிறது. படம் வெளியான பின்னர் இந்த கேமியோக்கள் படத்தை காப்பாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...