நாடு முழுவதும் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை
2014ஆம் ஆண்டுக்குப்பின் நாடு முழுவதும் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை 3.18 லட்சம்: ஸ்மிருதி இரானி!
நாடு முழுவதும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இதுவரையிலும் 3.18 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக மகளிா் மற்றும் குழந்தைகள் வளா்ச்சித்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து அவா் மேலும் கூறியதாவது: அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 52,272 குழந்தைகளும், மேற்கு வங்கத்தில் 47,744 குழந்தைகளும், குஜராத்தில் 43,658 குழந்தைகளும், தில்லியில் 37,418 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனா்.
நாகாலாந்து, மிஸோரம், லட்சத்தீவு, தாத்ரா மற்றும் நாகா் ஹவேலி ஆகிய இடங்களில் இதுதொடா்பாக எந்த வழக்கும் பதிவாகவில்லை.
காணாமல் போன குழந்தைகளின் முழு விவரங்களும் ‘ட்ராக்சைல்ட்’ மற்றும் ‘கோயா-பயா’ ஆகிய வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இந்த இரு வலை தளங்களிலும் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி வரை 3,18,748 குழந்தைகள் காணாமல் போனதாக பதிவாகியுள்ளன என்றாா்.