இனி உங்கள் செல்போன்களுக்கு சார்ஜர் தேவையில்லை!

 இனி உங்கள் செல்போன்களுக்கு சார்ஜர் தேவையில்லை!

    மிங்-சி-கோ என்பவர் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல்கள், ஐபேட் உள்ளிட்ட கருவிகளை ஆராய்வதில் புகழ்பெற்றவர். அண்மையில் இவர் வெளியிட்ட அறிவிப்பு தொழில்நுட்ப ஆர்வலர்களையும் பயன்பாட்டாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துள்ளது. 

   தொழில்நுட்பத்தைப் பொருத்தவரையில் நாளுக்கு நாள் நிமிடத்துக்கு நிமிடம் மாற்றங்களை சந்தித்து வருகிறது. லேட்டஸ்ட் போன் என யாருமே சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ள முடியாத வகையில் நாளொரு மேனி பொழுதொரு டிசைனுமாக செல்போன்கள் ஜொலி ஜொலிக்கின்றன. மனிதர்களின் ஆறாம் விரலாக மாறிவிட்ட செல்போன்களின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்பதும் உண்மை.

   இந்நிலையில் மிங்.சி.கோ போன்ற செல்போன் ஆராய்ச்சியாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது. அவர் கணிப்பின்படி இனி வரும் ஆண்டுகளில் ஆப்பிள் ஐபோன்கள் போர்ட்கள் எதுவுமின்று வெளிவரும் என்று கூறியுள்ளார்.  

     இரண்டே ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பத்தை ஆப்பிள் பின்பற்றவிருக்கிறது என்றும் அவ்வகையில் சார்ஜர், ஹெட்போன் உள்ளிட்ட அனைத்தும் வயர்லெஸாக மட்டுமே இருக்கும் என்றார். சார்ஜிங்கிற்கான போர்ட்டுடன் மட்டுமே வரும் செல்போன்கள் ஏற்கனவே வந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழில்நுட்பம் விலை உயர்ந்த ஐபோனில் மட்டும் இருக்கும், மற்றவை வழக்கம் போல யூஎஸ்பி செயல்பாடுகள் தொடரும் என்றார் மிங்.சி-கோ.   இதற்கு முன்னர் இது போன்ற தகவல்களை மிகச் சரியாக கணித்து கூறியிருக்கிறார் இந்த நிபுணர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...