நடிகர் ராகவா லாரன்ஸ் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டிகள் வழங்கினார் ..!

 நடிகர் ராகவா லாரன்ஸ் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டிகள் வழங்கினார் ..!

தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர் ஒவ்வொருவருக்கும் ஸ்கூட்டிகளை அன்பளிப்பாக வழங்கினார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

நடிகர்,  இயக்குநர்,  தயாரிப்பாளர்,  நடன இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ்.  அவர் நடிப்பில் தற்போது பென்ஸ் மற்றும் ஹண்டர் என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.  இதில் பென்ஸ் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார்.  ரெமோ,  சுல்தான் போன்ற படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்க உள்ளார்.  இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதுதவிர அவர் கைவசம் உள்ள மற்றொரு படமான ஹண்டர் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளது.  இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இப்படத்தை வெங்கட் மோகன் இயக்க உள்ளார்.  இவர் ஏற்கனவே விஷால் நடிப்பில் வெளிவந்த அயோக்கியா படத்தை இயக்கியவர் ஆவார்.  இது நடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படம் என்பதால் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க உள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.

இப்படி சினிமாவில் பிசியாக நடித்து வரும் ராகவா லாரன்ஸ்,  ஏழை எளியோருக்கு உதவி செய்யத் தவறுவதில்லை.  அந்த வகையில் அண்மையில் தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான மல்லர் கம்ப கலையில் கலக்கிய மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததோடு,  அவர்களுக்கு பைக் வாங்கி கொடுப்பதாகவும் வீடு கட்டித் தருவதாகவும் உறுதியளித்தார். அதுமட்டுமின்றி அவர்களை வைத்து படம் எடுக்க உள்ளதாகவும் அறிவித்தார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...