நாளை வாக்குப்பதிவு | 21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகள் முழுவிவரம்..!

 நாளை வாக்குப்பதிவு | 21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகள் முழுவிவரம்..!

நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த மாநிலங்களில், எத்தனை தொகுதிகளில், எந்த தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது என்கிற விவரங்களை இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே, நேற்றுடன் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பிரசாரங்கள் நிறைவடைகின்றன. மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாடு (39), அருணாச்சல பிரதேசம் (2 லோக்சபா தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகலா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழ்நாடு + புதுச்சேரியில்..

  1. திருவள்ளூர் (தனி)
  2. வட சென்னை
  3. தென் சென்னை
  4. மத்திய சென்னை
  5. ஸ்ரீபெரும்புதூர்
  6. காஞ்சிபுரம் (தனி)
  7. அரக்கோணம்
  8. வேலூர்
  9. கிருஷ்ணகிரி
  10. தருமபுரி
  11. திருவண்ணாமலை
  12. ஆரணி
  13. விழுப்புரம் (தனி)
  14. கள்ளக்குறிச்சி
  15. சேலம்
  16. நாமக்கல்
  17. ஈரோடு
  18. திருப்பூர்
  19. நீலகிரி (தனி)
  20. கோவை
  21. பொள்ளாச்சி
  22. திண்டுக்கல்
  23. கரூர்
  24. திருச்சிராப்பள்ளி
  25. பெரம்பலூர்
  26. கடலூர்
  27. சிதம்பரம் எஸ்சி
  28. மயிலாடுதுறை
  29. நாகப்பட்டினம்
  30. தஞ்சாவூர்
  31. சிவகங்கை
  1. மதுரை
  2. தேனி
  3. விருதுநகர்
  4. ராமநாதபுரம்
  5. தூத்துக்குடி
  6. தென்காசி (தனி)
  7. திருநெல்வேலி
  8. கன்னியாகுமரி
  9. புதுச்சேரி

என மொத்தம் 40 தொகுதிகள் இருக்கின்றன. இதில் திமுக vs அதிமுக vs நாதக vs பாஜக என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தை பொறுத்த அளவில் 1. அருணாச்சலம் மேற்கு, 2. அருணாச்சலம் கிழக்கு என இரண்டு தொகுதிகள் மட்டுமே இருக்கின்றன.

அசாம் மாநிலத்தை பொறுத்த அளவில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில்

  1. காசிரங்கா
  2. சோனித்பூர்
  3. லக்கிம்பூர்
  4. திப்ருகர்
  5. ஜோர்கட்

என 5 தொகுதிகளுக்கு மட்டும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில்

  1. அவுரங்காபாத்
  2. கயா (SC)
  3. 39 நவாடா
  4. ஜமுய்

என 4 தொகுதிகளுக்கு மட்டும் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சத்தீஸ்கரை பொருத்த அளவில், மொத்தமுள்ள 11 தொகுதிகளில் பஸ்தர் எனும் ஒரேயொரு தொகுதியில் மட்டும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

29 தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேசத்தில்

  1. சிந்த்வாரா
  2. பாலகாட்
  3. ஜபல்பூர்
  4. மாண்ட்லா
  5. சித்தி
  6. ஷாஹ்டோல்

ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரப் பிரதேசத்தில்

  1. சஹாரன்பூர்
  2. கைரானா
  3. முசாபர்நகர்
  4. பிஜ்னோர்
  5. நாகினா
  6. மொராதாபாத்
  7. ராம்பூர்
  8. பிலிபித்

மகாராஷ்டிராவை பொறுத்த அளவில்

  1. சந்திராபூர்
  2. பண்டாரா-கோண்டியா
  3. ராம்டெக்
  4. நாக்பூர்
  5. கட்சிரோலி-சிமூர் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீரில் உதம்பூர் தொகுதிக்கும், உத்தரகாண்ட்டில்

  1. ஹரித்வார்
  2. டெஹ்ரி கர்வால்
  3. கர்வால்
  4. அல்மோரா
  5. நைனிடால் ஆகிய தொகுதிகளிலும்,

மேற்கு வங்கத்தில்

  1. கூச்பெஹார்
  2. அலிபுர்துவார்ஸ்
  3. ஜல்பைகுரி

மணிப்பூரில் உள்ள இரண்டு தொகுதிகளிலும், லட்சத்தீவில் ஒரு தொகுதியிலும், மேகாலயாவில் ஷில்லாங், துரா என 2 தொகுதிகளிலும், மிசோரத்தில் மிசோரம் எனும் தொகுதியிலும், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம் தொகுதியிலும், திரிபுராவில் திரிபுரா மேற்கு தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...