சென்னையில் இன்று தபால் வாக்கெடுப்பு தொடக்கம்..!
சென்னையில் தபால் வாக்கெடுப்பு இன்று முதல் தொடங்க உள்ளது. 13ம் தேதி வரை தபால் வாக்கெடுப்பு சென்னையில் நடத்தப்படும்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தபால் வாக்களிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் வீட்டில் இருந்து தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஏற்கனவே 12டி பார்ம் வழங்கப்பட்டது. இந்த பார்ம் கடந்த மாதம் சென்னை மக்களிடையே வழங்கப்பட்டு அதில் விருப்பம் உள்ளவர்களின் பெயர்கள் எடுக்கப்பட்டன. அந்த வகையில் 4 ஆயிரத்து 175 முதியவர்கள் இதில் விண்ணப்பம் செய்தனர். அதேபோல் விண்ணப்பம் செய்த மாற்றுத்திறனாளிகள் 363 பேரும் இதில் தேர்ச்சி பெற்றனர். தபால் மூலம் வாக்களிக்க இவர்கள் தேர்வானார்கள்.
இந்த நிலையில்தான் சென்னையில் தபால் வாக்கெடுப்பு இன்று தொடங்கி உள்ளது. 13ம் தேதி வரை தபால் வாக்கெடுப்பு சென்னையில் நடத்தப்படும். இதற்காக 65 குழுக்கள் இவர்களின் வீடுகளுக்கு செல்ல உள்ளன. முறையான பாதுகாப்புடன், இவர்களின் வாக்குகளை பெற உள்ளன. ஒரு குழுவிற்கு 4 பேர் என்று கிட்டத்தட்ட 250 பேர் இன்று முதல் களமிறங்க உள்ளனர்.
வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களில் இதேபோல் தபால் வாக்குகள் மற்ற மாவட்டங்களிலும் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மக்களவைப் பொதுத்தேர்தல்கள். 2024 மற்றும் 233.விளவன்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.04.2024 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்காணும் தேர்தல்களின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியீடுதலுக்கும் பரப்புதலுக்கும் பின்வரும் வரையறைகள் பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது:-
அ) 1951ஆம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126Aஆம் பிரிவின் விதித்துறைகளின்படி, (1) யாதொரு நபரும் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையில், அது எதுவாயினும், பரப்பவோ கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தினால் இதுசம்பந்தமாக அறிவிக்கப்படலாம்.
(2) உட்பிரிவு (1)-றின் காரணங்களுக்காக, தேர்தல் ஆணையம், ஒரு பொது ஆணைப்படி, பின்வருவனவற்றைக் கருத்தில் கொண்டு தேதி மற்றும் நேரத்தை அறிவிக்கும். அதாவது:-
(a) ஒரு பொதுத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.
(b) ஓர் இடைத்தேர்தல் அல்லது பல இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் மற்றும் வாக்குப்பதிவின் முதல் நாளிலிருந்து வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம். 160 இடைத்தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் ஒன்றாக
நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.