மகனுக்கு கடிதம் – ஜெ.ஜீவா ஜாக்குலின்
மகனுக்கு கடிதம்
கருவில் உனைசுமந்து
உடல் உருகி
உயிர் தந்த
ஆலயமடா…
ருசிக்கு புசிக்காமல்
பசிக்கு புசிக்கும்
தளர்ச்சி நாடியடா
ஈ.. எறும்பு மிக்காமல்
அழு முன்
உன் தேவையறிந்த
தேவதையடா…
உன் கண்ணில் நீர் கசிந்தால்
உயிர் கசிந்து
துடித்த
உயிரோட்டமடா…
என்ன தவம் செய்திருப்பாள்
எத்தனை துயர் துடைத்திருப்பாள்
ஒரு வேளை உணவிற்கு
தரை துடைக்க வைத்தாய்யடா
செல்லப்பிராணியிருக்க இடமுண்டு
என் செல்லமே
அவளிருக்க இடமின்றி
போனதடா…
அள்ளிக்கொடு உலகிற்கு
அன்னையை கொடுக்காதே
அருமை மகனே — நீ
குடியிருந்த கோவிலடா…
குளிர வைக்காமல்
குளிரில் வைத்தாயடா
கோமகனே…
நீ நன்றாய் வாழ
அவள் கனலாய் சுழன்றாலடா
கேட்டால் கொடுக்கும் சாமி (இறைவன்)
கேட்காமல் தரும் (தாய்)…
தளர்ந்த நேரத்தில்
தாங்கி பிடி அவளை
தட்டி விடாதே
தங்கமே…
இப்படிக்கு
உன்னைத் தாங்கிய ஆலயம்
————————————————————————————————————————————-
– ஜெ.ஜீவா ஜாக்குலின் – கடலூர்