நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகார வேட்கை கொண்டவை வளம் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்கள் நலனைப் புறக்கணித்து வளங்களைக் கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவை.– தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி.
அச்சச்சோ தமிழ்நாட்டு வளங்களை கொள்ளை அடிக்கிறது, மகாராஷ்டிராவில் நள்ளிரவு கட்சி ஆட்சிமாற்றம் இதையெல்லாம் ஐயா மறந்துட்டாரு போலவே……
********************************
குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் தடை விதிக்கக் கோரும் மனு மீது விசாரணை நடத்த முடியாது. ஆனால் அது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுத்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.
ஏதாவது பார்த்து செய்யுங்க சாமி இப்ப இருக்க நாடாளுமன்றத்தில் 15 சதவீதம் பேருக்கு குற்றப்பின்னணி இருக்காம். அதிலேயே 7 சதவீதம் பேரு தீவிரமான குற்றச்சாட்டுகளோட தொடர்பு இருக்கவங்களாம்…..
*************************************
இந்திய நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எத்தகைய நடவடிக்கையிலும் இலங்கை ஈடுபடாது. புதிய அதிபர் கோத்தபய ராஜபட்ச.
இந்திய நலன்கள்னா..?? இந்தியாவில் இருக்கிற தமிழர்களோட உறவுகளான ஈழத் தமிழர்களும் இதில் அடங்குவாங்தானே……அதையும் கொஞ்சம் மனசுல வச்சுக்கிட்டிங்கனா நல்லா இருக்கும்.
****************************************
தூய்மையற்ற காற்று ,குடிநீரால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஏன் இழப்பீடு அளிக்கக்கூடாது?!?– மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.
அப்படியே தொழிற்சாலைகளுக்கும், மக்கள் விரோத திட்டங்களுக்கும் கோடி கோடியா செலவிடுற நீங்க …. ஏன் மக்களுக்கான தூய்மையான காற்று. குடிநீர் ஆதாரங்களுக்காக செலவிடக் கூடாது ?? ன்னு ஒரு கேள்வியையும் சேத்து கேளுங்க எசமான்.
************************************
நவம்பர் 26- உடல்பருமன் எதிர்ப்பு விழிப்புணர்வு தினம்.
ஒல்லியா இருக்கவங்க எல்லாம் விருந்து கொடுங்க… எங்க போலாம்…KFC,PIZZA HUT, MCDONALD’S,MULTI CUSINE…….
***************************************