அமித்ஷாவின் தமிழ்நாடு தேர்தல் பிரசாரம் திடீர் ரத்து..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் என தமிழ்நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் திடீரென்று அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி போட்டியிடுகிறது. விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 4, 5 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் அமித்ஷா பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை அமித்ஷா தமிழகம் வருகிறார். அதன்பிறகு அவர் மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய தொகுதிகளிலும், ஏப்ரல் 5ம் தேதி கன்னியாகுமரி, சென்னையிலும் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் தீவிரமாக செய்து வந்தனர். இந்நிலையில் தான் திடீரென்று அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.