இந்தியாவில் வேலையின்மை விகிதம் 83% ஆக உயர்வு

 இந்தியாவில் வேலையின்மை விகிதம் 83% ஆக உயர்வு

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வின்படி,  நாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வேலையின்மை விகிதம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இது நாட்டிற்கு மற்றொரு கடுமையான பிரச்னையாக இருக்ககூடும் என தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் பொருளாதார நிலைமை குறித்தும், பட்டதாரிகளுக்கு வேலையின்மை தொடர்பாக பொருளாதார சிந்தனைக் குழுவான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் (IHD) இணைந்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வின்படி, கடந்த 2000 ஆம் ஆண்டில் வேலையில்லாதவர்களின் விகிதம் 54.2% இருந்துள்ளது. அதன்பின் 2022 ஆம் ஆண்டு நடைபெற ஆய்வில் வேலையில்லாத படித்த இளைஞர்களின் விகிதம் 65.7% ஆக இருந்தது. அந்த ஆண்டு வேலையில்லாத ஆண்களின் விகிதம் 62.2% ஆக இருந்துள்ளது. இதைபோல் பெண்களின் விகிதம் 76.7% ஆக இருந்தது. ஆண்களை விட பெண்களின் விகிதம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆய்வின் படி, இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களிடையே, குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள படித்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

2000 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை,வேலையின்மை சற்று குறைவாக இருந்தது. ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பிற்குபின் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை  அதிகரித்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வேலை உருவாக்கத்தை ஊக்குவித்தல், வேலையின் தரத்தை மேம்படுத்துதல், தொழிலாளர் சந்தையில் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல், செயலில் உள்ள தொழிலாளர் சந்தையின் திறன்கள் மற்றும் கொள்கைகள் இரண்டையும் வலுப்படுத்துதல், மற்றும் தொழிலாளர் சந்தை முறைகள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பற்றிய அறிவுப் பற்றாக்குறையைக் குறைத்தல் ஆகியவை வேலையின்மை குறைக்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...