“டைட்டானிக்” ரோஸின் உயிரைக் காப்பாற்றிய கதவு,  ஏலத்தில் ரூ.5.99-கோடிக்கு விற்கப்பட்டது.

 “டைட்டானிக்” ரோஸின் உயிரைக் காப்பாற்றிய கதவு,  ஏலத்தில் ரூ.5.99-கோடிக்கு விற்கப்பட்டது.

டைட்டானிக் திரைப்படத்தில்,  கேட் வின்ஸ்லெட்டின் கதாபாத்திரமான ரோஸின் உயிரைக் காப்பாற்றிய கதவு,  ஏலத்தில் ரூ.5.99-கோடிக்கு விற்கப்பட்டது.

பிரபல டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பனிப்பாறையின் மீது மோதி, விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.  இந்த விபத்தில், டைட்டானிக் கப்பலில் பயணித்த 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டைட்டானிக் தொடர்பான ஆய்வுகள் இன்று வரை நடைபெற்று வருகின்றன.

இதைவைத்து 1997 ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் திரைப்படம் லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோரின் வாழ்க்கையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது.  ‘டைட்டானிக்’ திரைப்படம் உருவாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டாலும், இன்னும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.

படத்தின் கடைசி காட்சியில் லியானார்டோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் (ஜாக் & ரோஸ்) பற்றிக்கொண்டிருக்கும் கதவு  ரூ.5.99 கோடிக்கு ($718,750) ஏலம் போனது.  படத்தின் ஹீரோ ஜாக் மற்றும் ஹீரோயின் ஒவ்வொரு நாளும் கதவின் உதவியுடன் தங்கள் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.  கதவு  மூழ்கத் தொடங்கும் போது, ​​ ஜாக் அதை விடுவித்தார்.   மேலும், இப்படத்தில் கேட் வின்ஸ்லெட் அணிந்திருந்த சிஃப்பான் ஆடை 1 கோடிக்கு ($125,000) ஏலம் போனது.

முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு,  டைட்டானிக் கப்பல் கப்பலில் பயணம் செய்தவர்களுக்கான உணவுப் பட்டியல் 84 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. முதல் வகுப்பு பயணிகள் ஆர்டர் செய்த இந்த உணவு பட்டியலில்,  மாட்டிறைச்சி,  மீன்கள், வாத்து இறைச்சி,  சாதம்,  ஐஸ் கிரீம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...