தினமலர் வாரமலர் பழகலாம் வாங்க – 1 – கமலகண்ணன்
தினமலர் வாரமலர் பழகலாம் வாங்க – 1 – கமலகண்ணன்
எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், சென்னை மிக நெரிசலான நகரமாக இருக்கிறது, இன்னும் வளரும் காலங்களில் வரும் காலங்களில் இன்னும் நெரிசலாக கூடும், அதனால் வேறு நகரத்திற்கு மாற்றினால் நல்லது என்று ஆலோசகர்கள் சொன்னார்களாம்.
எல்லாருக்கும் பொதுவாக ஒரு இடம் இருந்தால் மிகவும் எளிதாக இருக்கும் என்பது ஆலோசகர்களின் கருத்து, அப்படி தேர்வு செய்யப்பட்ட நகரம் தான் திருச்சி எத்தனையோ சிறப்புகளை உள்ளடக்கி வைத்திருந்த திருச்சி என்ன காரணத்தினாலோ தமிழ்நாட்டின் தலைநகரமாக மாறஇயலவில்லை. அத்தனை சிறப்பு வாய்ந்த திருச்சி 16-ந் தேதி மேலும் ஒரு புகழாரத்தை தனக்குச் சூட்டிக் கொண்டது. அந்த புகழாரத்தில் பூக்கள் தூவி வாழ்த்தி அறிஞர்களால் வாழ்த்தும் பெற்ற நிறைவோடு மனதில் சுமந்து வந்திருக்கிறேன்
தினமலர் வாரமலர் இதழில் டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி ஒவ்வொரு வருடமும் மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. அது இந்த வருடம் மிகவும் சிறப்பாக நடைபெற்று. முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு அதை தாண்டி ஆறுதல் பரிசாக 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசளிக்க எழுத்துலக சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி ராஜேஷ்குமார் அவர்களின் திருக்கரங்களை ஏற்பாடு செய்திருந்தனர் தினமலர் குணசேகரன் , மணிகண்டன் சென்னையில் இருந்து சேதுராமன் மற்றும் அரியசாமி, பேராசிரியர் பாலகிருஷ்ணன் இன்னும் பற்பல அன்பர்கள் இதில் மிக முழுமூச்சாக எல்லாவற்றையும் மின்னலாக முடித்து விழாவை அமர்க்களப் படுத்தி விட்டார்கள்.