பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழ்நாடு வருகிறார்

 பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழ்நாடு வருகிறார்

பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரியில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் நெருங்கும் சூழலில் பீகார்,  உத்தரப்பிரதேசம் என நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி,  பொதுக்கூட்ட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்.  அந்த வகையில்,  இன்று தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி,  கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதற்காக,  டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடியை,  விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.  அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காலை 11 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் பிரதமரை பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களான டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.

அதன்பின்னர்,  சாலை மார்க்கமாக 3 கிலோ மீட்டர் தொலைவில் அகஸ்தீஸ்வரம் ஏழுசாத்துபட்டு பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார்.  அங்கு பாஜக பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் பாஜக-வில் கட்சியை இணைத்த சரத்குமார்,  விஜயதரணி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.  நண்பகல் 12.15 மணியளவில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த நான்காயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...