ஜூனியர் ஆசிய கோப்பை – அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!

 ஜூனியர் ஆசிய கோப்பை – அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி, தென் கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

21 வயதுக்கு உட்பட்டோருக்கான 10வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் கடந்த நவ.26ம் தேதி தொடங்கியது. இந்த போட்டி நாளை மறுநாள் (டிச.4) வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சீனதைபே, தாய்லாந்தும், ‘பி’ பிரிவில் பாகிஸ்தான், மலேசியா, வங்காளதேசம், ஓமன், சீனாவும் இடம் பிடித்துள்ளன.

இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அதனுடன், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும். இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று (டிச.2) தென் கொரியாவை சந்தித்தது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட இந்தியா அணி இறுதியில் 8-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. மேலும், ஜப்பான், பாகிஸ்தான், மலேசியா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான்- ஜப்பான், இந்தியா- மலேசியா அணிகள் மோதுகின்றன.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...