மலர்வனம் சாதனை மகளிர் விருதுகள் விழா

 மலர்வனம் சாதனை மகளிர் விருதுகள் விழா

மலர்வனம் சாதனை மகளிர் விருதுகள் விழா

மலர்வனம் மின்னிதழின் சாதனை மகளிர் விருதுகள் வழங்கும் விழா மைலாப்பூர் பாரதீய வித்யா பவனில் அண்மையில் (10.3.2024) மாலை சிறப்பாக நடைபெற்றது. மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஷ்ருதி ப்ரஷாந்த், எழுத்தாளர் லதா சரவணன் மற்றும் நாராயணி சங்கமித்ரன், இயக்குனர், வைகறை புட்ஸ் பி. லிமிடெட் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் 17 சாதனை மகளிர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

விருது பெற்றவர்கள்… மலர்வனம் சிறந்த பட்டையக் கணக்காளர் & வரி ஆலோசகர் விருது – திவ்யா அபிஷேக், சிறந்த Ai ஆராய்ச்சியாளர் விருது – காம்கேர் கே. புவனேஸ்வரி, ரத்ன கமலம் விருது (கதக் நிருத்ய & பரத நாட்டியம்) – லட்சுமி கண்ணன், தமிழ்ச் சுடர் விருது – முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய், சிறந்த அன்னை விருது-சி. வித்யாலட்சுமி, ரத்ன கமலம் விருது (பரத நாட்டியம்) – அகிலா சத்தியநாராயணன், சிறந்த வளரும் தொழிலதிபர் விருது – அக்ஷயா கிருஷ்ணகுமார், சாதனை நட்சத்திரம் விருது – பகவதி மணிகண்டன், இசைச்சேவை திலகம் விருது – டாக்டர். ஜி. ராஜலட்சுமி, மருத்துவ சேவை ஆர்வலர் விருது – டாக்டர் ஆர். நித்யஸ்ரீ, சிறந்த எழுத்தாளர் விருது -இராஜலட்சுமி பிரபாகரன், செவிநுகர் இசைமணி விருது – வைஷ்ணவி ராமதாஸ், சிறந்த பத்திரிக்கை எழுத்தாளர் விருது – தனுஜா ஜெயராமன், சிறந்த மொழிபெயர்பாளர் விருது – ஸ்நேஹா நாராயணசுவாமி, சிறந்த உடற்கல்வி ஆர்வலர் விருது – ஜி. மஹதேஸ்வரி, சிறந்த புகைப்பட கலைஞர் விருது- காயத்ரி சுந்தரகந்தன், கோல அரசி விருது – ராதா கல்யாணராமன்.

விருது பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் அளித்து கௌரவிக்கப்பட்டார்கள். திரு. உதயம் ராம், எழுத்தாளர் என்சி மோகன்தாஸ் மற்றும் கவிஞர் பொ.வெ, இராஜகுமார் வாழ்த்துரை வழங்கினார்கள். மலர்வனம் ஆசிரியர் ராம்கி வரவேற்புரை ஆற்ற, டி.எஸ். ஸ்ரீதரன் நன்றியுரை ஆற்றினார்.

உமா பிரேம் நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்க, இணை ஆசிரியர் சீதாலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

லதா சரவணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...