“அகமும் புறமும்”
புற உலகை நோக்கின்
பூவுலகம் காணலாம்,
அக உலகை நோக்கின்
ஆத்ம ஞானம் பெறலாம்.
புற அழகின்
ஈர்ப்பு,
மாய சக்தியின்
மகிமை,
ஆனால் அகத்தின் ஆழம்
தருவதோ,
ஆன்மிகப்
பெருமை.
புறத்தை
ஆட்கொள்வது
நம் புலன்களின்
வசியம்,
அகத்தை
ஆட்கொள்வதோ,
யோக சமாதி
தரும் இன்பம்.
வெளியில் எண்ணங்களை
செலுத்தினால்
விஞ்ஞான உலகம்
புலப்படும்.
அதையே உள்நோக்கித்
திருப்பினால்,
மாய சக்தி
உடையும்,
பின் பேருண்மை
புரியும்.
மற்றவரின்
அனுபவத்தால்,
நமெக்கென்ன
லாபம் ?
அது வெறும் போலியாகத்
தோன்றும்,
நாம் நேரில் பெறும்
அனுபவமே,
ஆத்ம ஞானம்
அளிக்கும்.
போதை தரும்
புற உலகம்,
துன்பத்தையே
அளிக்கும்.
தியானம் தரும்
பேரறிவோ,
பரமபதம்
காட்டும்.
புலனடக்க முயற்சி
கொண்டு,
புற உலகை
வெல்வோம்,
சிந்தையை
உள் செலுத்தி
அத்வைத உணர்வைப்
பெறுவோம்.
பி வி வைத்தியலிங்கம்


ஐயாவின் கவிதைகள்
அன்பு வளர்க்கும் விதைகள்