தாய் மொழி
தாய் மொழி
கைகளின் சைகைகளிலே
கண்டிருந்த வாழ்க்கையிலே
ஒலி கொண்டு மொழி கண்டு
வழி உண்டானது வளர்கையிலே
புரிதலுக்கு பயன்பட்டது-பின்
நெறிப்படுத்த பண்பட்டது
இலக்கணம் கருவாக -அதில்
இலக்கியம் உருவானது
பொழியும் புலமையோர்
எழிலாக ஏட்டினிலே
தொழிலாக்கி தொட்டனர்
அழியாத ஆளுமையை
மொழியாலே முடியுமென
வழிகாட்டி வைத்தனர்
அன்றுமுதல் இன்றுவரை
உலக மொழியில்
உயர்ந்த மொழியாய்
தமிழ்மொழியை முன்மொழிந்த
வள்ளுவனும் வாழ்வது
எழுத்தாணியால் எழுதிய
தாய் மொழியாலே.