வரலாற்றில் இன்று ( 21.02.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

பெப்ரவரி 21 கிரிகோரியன் ஆண்டின் 52 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 313 (நெட்டாண்டுகளில் 314) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

362 – புனிதர் அத்தனாசியார் அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பினார்.
1437 – இசுக்கொட்லாந்தின் முதலாம் யேம்சு மன்னர் படுகொலை செய்யப்பட்டார்.
1440 – புருசியக் கூட்டமைப்பு உருவானது.
1543 – எத்தியோப்பிய, போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் அகமது கிரான் தலைமையிலான முசுலிம் படைகளைத் தோற்கடித்தன.
1613 – முதலாம் மிக்கையில் உருசியப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரொமானொவ் அரச வம்சம் ஆரம்பமானது.
1803 – கண்டிப் போர்கள்: கண்டி மீது பிரித்தானியர் போர் தொடுத்தனர்.[1]
1804 – நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது.
1808 – உருசியப் படை பின்லாந்து எல்லையைத் தாண்டி சுவீடனை அடைந்தது. பின்லாந்துப் போர் ஆரம்பமானது. இப்போரில் சுவீடன் பின்லாந்தை உருசியாவுக்கு இழந்தது.
1842 – தையல் இயந்திரத்துக்கான 1-வது அமெரிக்கக் காப்புரிமத்தை யோன் கிரீனா பெற்றார்.
1848 – கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் எங்கெல்சும் பொதுவுடைமை அறிக்கையை வெளியிட்டனர்.
1878 – முதலாவது தொலைபேசி விபரக்கொத்து அமெரிக்காவில் கனெடிகட்டில் வெளியிடப்பட்டது.
1885 – வாசிங்டன் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது.
1907 – நெதர்லாந்தில் பெர்லின் என்ற கப்பல் மூழ்கியதில் 125 பேர் உயிரிழந்தனர்.
1919 – செருமனிய சோசலிசவாதி கூர்ட் ஐசுனர் கொல்லப்பட்டார்.
1921 – ஈரானில் இடம்பெற்ற புரட்சியில் ரெசா ஷா தெகுரானைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போரில் வெளிநாட்டு தேசிய தன்னார்வலர்களை உலக நாடுகள் சங்கம் தடை செய்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டையின் போது, சப்பானிய கமிக்காசு வானூர்திகள் அமெரிக்காவின் பிசுமார்க் சீ என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்தன. சரட்டோகா கப்பல் சேதமடைந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய முனையில் பிரேசிலிய\[ படைகள் செருமனியப் படைகளை மொண்டே காசுட்டெல்லோ சமரில் தோற்கடித்தன.
1947 – எட்வின் லாண்ட் பொலராய்டு என்ற முதலாவது உடனடி படம்பிடிகருவியை நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார்.
1952 – வின்ஸ்டன் சர்ச்சிலின் பிரித்தானிய அரசு ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் அடையாள அட்டை முறையை நீக்கியது.
1952 – வங்காள மொழி இயக்கம்: கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழியை அதிகாரபூர்வ மொழியாக்கக் கோரி டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய எழுச்சிப் போராட்டம் ஒன்றின் போது காவற்துறையினர் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நாள் பின்னர் யுனெஸ்கோவினால் அனைத்துலக தாய்மொழி நாள் என அறிவிக்கப்பட்டது.
1960 – பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.
1965 – மல்கம் எக்ஸ் நியூயோர்க் நகரில் இசுலாமியத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1972 – சீன-அமெரிக்க உறவுகளை சீர் செய்யும் பொருட்டு அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் சீனா சென்றார்.
1972 – சோவியத்தின் ஆளில்லா லூனா 20 சந்திரனில் இறங்கியது.
1973 – சினாய் பாலைவனத்தில் இசுரேல் போர் விமானம் லிபியாவின் பயணிகள் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.
1974 – சூயெஸ் கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து கடைசி இசுரேலியப் படைகள் வெளியேறின.
1995 – இசுட்டீவ் பொசெட் என்பவர் அமைதிப் பெருங்கடலின் குறுக்கே வெப்பக்காற்று வாயுக்கூண்டில் பயணம் செய்த முதல் மனிதராக கனடாவின் லீடர் நகரில் தரையிறங்கினார்.
2013 – 2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள்: இந்தியாவின் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 20 மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1728 – மூன்றாம் பீட்டர், உருசியப் பேரரசர் (இ. 1762)
1801 – ஜான் ஹென்றி நியூமன், ஆங்கிலேயக் கருதினால் (இ. 1890)
1878 – மிரா அல்பாசா, பிரான்சிய-இந்திய மதத் தலைவர் (இ. 1973)
1894 – சாந்தி சுவரூப் பட்நாகர், இந்திய வேதியியலாளர் (இ. 1955)
1896 – நிராலா, இந்தியக் கவிஞர் (இ. 1961)
1910 – டக்ளஸ் பேடர், ஆங்கிலேய விமானி (இ. 1982)
1921 – ஜான் ரால்ஸ், அமெரிக்க மெய்யியலாளர் (இ. 2002)
1924 – இராபர்ட் முகாபே, சிம்பாப்வேயின் 2வது அரசுத்தலைவர் (இ. 2019)
1946 – அலன் ரிக்மான், ஆங்கிலேய நடிகர், இயக்குநர் (இ. 2016)
1958 – கிம் கோட்ஸ், கனடிய நடிகர்
1964 – ஸ்காட் கெல்லி, அமெரிக்க விண்வெளி வீரர்
1970 – கருணாஸ், தமிழக நடிகர், அரசியல்வாதி
1980 – ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக், பூட்டான் மன்னர்
1987 – எலன் பேஜ், கனடிய நடிகை
1988 – வேதிகா குமார், தென்னிந்திய நடிகை

இறப்புகள்

1829 – ராணி சென்னம்மா, இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1778)
1906 – வி. கனகசபைப் பிள்ளை, ஈழத்து-தமிழகத் தமிழறிஞர் (பி. 1855)
1926 – ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ், நோபல் பரிசு பெற்ற இடச்சு இயற்பியலாளர் (பி. 1853)
1938 – ஜார்ஜ் எல்லேரி ஏல், அமெரிக்க வானியலாளர் (பி. 1868)
1965 – மல்கம் எக்ஸ், அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1925)
1981 – ஏ. எஸ். ராஜா, இலங்கைத் திரைப்பட, நாடக நடிகர்
1984 – மிகயில் ஷோலகவ், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. 1905)
2001 – நரேன் சந்து பரசார், இந்திய மொழியியலாளர் (பி. 1934)
2001 – செர்கேய் அலெக்சாந்திரோவிச் செவாகின், உருசிய வானியலாளர் (பி. 1916)
2012 – முத்துராஜா, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்
2018 – பில்லி கிரகாம், அமெரிக்க கிறித்தவ நற்செய்தியாளர் (பி. 1918)

சிறப்பு நாள்

பன்னாட்டுத் தாய்மொழி நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!