விசா தேவையில்லை 62 நாடுகள் செல்லலாம்..! | உமாகாந்தன்
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய பல நாடுகள் உள்ளன. எனவே, நீங்கள் விரைவான மற்றும் தொந்தரவு இல்லாத சர்வதேச விடுமுறையை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் விசா தேவைப்படாத நாடுகளுக்கு செல்லலாம்.
இந்த விசா இல்லாத நாடுகளில், சுங்க அதிகாரிகள் உங்கள் பாஸ்போர்ட் அல்லது உங்கள் அடையாளத்தை சரிபார்த்து, ஒரு நுழைவு முத்திரையை உங்களுக்கு வழங்குவார்கள்
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நுழைவதற்கு விசா தேவைப்படாத நாடுகள் என்றும் விசா இல்லாத நாடுகளைத் தவிர, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வருகையின் போது விசாவிற்கு விண்ணப்பிக்கக்கூடிய பல இடங்கள் உள்ளன.
பல நாடுகள் தங்கள் நாட்டுபொருளாதாரத்தை மேம்படுத்த சுற்றுலாவிற்க்கு பலரையும் வரவேற்கின்றார்கள்,
தற்போது பல்வேறு கண்டங்களில் உள்ள அறுபத்திரண்டு நாடுகள் இந்தியப் பயணிகளை தங்கள் நாடுகளுக்குச் சென்று அவர்களின் தனித்துவமான கலாச்சாரம், அழகிய இடங்கள், கடற்கரைகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அனுபவிக்கும்படி அழைக்கின்றன.
விசா இல்லாமல் இந்தியர்களை வரவேற்கும் நாடுகளின் பட்டியலில் தென்கிழக்கு ஆசிய பிராந்தியம், ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் ஆகிய நாடுகள் அடங்கும். இந்த நாடுகள் பல பிரபலமான சுற்றுலாத் தலங்களுடன் தனித்துவமான கலாச்சார இடங்களாகும். கடந்த சில ஆண்டுகளாக, இந்தியர்கள் பயணம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலகின் மிக மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மற்றும் ஸ்பெயின் ஆகியவை முதலிடத்தை பிடித்துள்ளன
2024ஆம் ஆண்டின் உலகின் மிக மதிப்புமிக்க பாஸ்போர்ட் அடங்கிய பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு வெளியிட்டுள்ளது.சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் (IATA) தரவுகளின் அடிப்படையில் இவை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள், உலக அளவில் 194 நாடுகளுக்குள் விசா இல்லாமல் நுழைய முடியும்.
இந்த பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 80வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய மக்கள் விசா இல்லாமல் இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பிரபலமான நாடுகள் உட்பட 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்
தற்போது, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய ஆறு நாடுகள் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களை வைத்திருக்கும் பட்டத்தை பெற்றுள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 194 இடங்களுக்கு பயணிக்க முடியும்.
அதேபோல் ஆப்கானிஸ்தான் மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தான் குடிமக்கள் விசா இல்லாமல் உலகில் இருபத்தி எட்டு நாடுகளில் மட்டுமே நுழைய முடியும்.
மேலும் சிரியா மற்றும் ஈராக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் முறையே 29 மற்றும் 31 நாடுகளில் நுழைய முடியும். பாகிஸ்தான் குடிமக்கள் விசா இல்லாமல் முப்பது மாவு இடங்களுக்கு பயணிக்கலாம்.
இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய நாடுகள் பட்டியல்
அங்கோலா, பார்படாஸ், பூட்டான், பொலிவியா, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், புருண்டி, கம்போடியா, கேப் வெர்டே தீவுகள், கொமொரோ தீவுகள், குக் தீவுகள்,
ஜிபூட்டி, டொமினிகா, எல் சால்வடார், எத்தியோப்பியா, பிஜி, கபோன் , கினியா – பிசாவ், ஹைட்டி, இந்தோனேசியா,
ஈரான், ஜமைக்கா, ஜோர்டான், கஜகஸ்தான், கென்யா, கிரிபதி, லாவோஸ், மக்காவ் (SAR சீனா), மடகாஸ்கர், மலேசியா,
மாலத்தீவுகள், மார்ஷல் தீவுகள், மொரிட்டானியா, மொரிஷியஸ், மைக்ரோனேஷியா, மொன்செராட், மொசாம்பிக், மியான்மர், நேபாளம், நியு, ஓமன்,
பலாவ் தீவுகள், கத்தார், ருவாண்டா, சமோவா, செனகல், சீஷெல்ஸ், சியரா லியோன், சோமாலியா, இலங்கை, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்,
லூசியா, செயின்ட் லூயிஸ் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், தான்சானியா, தாய்லாந்து, திமோர்-லெஸ்டே, டோகோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துனிசியா, துவாலு, வனுவாட்டு மற்றும் ஜிம்பாப்வே.