தை வெள்ளி நாக வழிபாடு

தை வெள்ளி நாக வழிபாடு

பாம்புகளால் நிலம் வளம்பெறுகிறதென்றும், பாம்புகளை வழிபடுவதால் தங்கள் குடும்பத்தில் செல்வவளம் பெருகி நிலைக்குமென்றும் மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் கோவில், குளக்கரை அல்லது அரச மரத்தடி போன்ற இடங்களில் பாம்பு வடிவம் செதுக்கப் பட்டகற்கள் நடப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

நாகராஜாவை தெய்வமாக வழிபடும் வழக்கம் காலம்காலமாக தொடர்ந்து வந்துள்ளது. நாகவழிபாடு செய்யும் முறைகள் : புற்று இருக்கும் இடத்தைச் சுற்றி முதலில் சாணத்தால் மெழுகிக் கோலமிட வேண்டும். தினமும் காலையும், மாலையும் விளக்கேற்றிப் பால் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.

சூடம் ஏற்றி வழிபாடு செய்து புற்றுக்குப் பால் ஊற்றினால் நல்லது நடக்கும். புற்று முழுவதும் மஞ்சளைப் பூசி, அங்கங்கே குங்குமப் பொட்டு வைப்பது தமிழ்நாட்டில் சில இடங்களில் வழக்கமாக உள்ளது. சில பெண்கள் புற்றுக்கு முன்பாகப் பொங்கல் இட்டு படைப்பதுண்டு தங்களது வேண்டுதல்கள் நிறைவேறப் பிரார்த்தித்து மஞ்சள் நிற எலுமிச்சையை புற்றின் மீது வைக்கும் வழக்கம் உள்ளது.

புற்றை மூன்று முறை வலம் வந்து அம்மனை வழிபடுவது போல் வேண்டினால் எண்ணியவை நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். நாக வழிபாட்டின் நன்மைகள்! 1) குடும்பம் நலமாக இருக்க வேண்டி வழிபடுதல். 2) மகப்பேறு வேண்டி வழிபடுதல். 3) பிரசவம் இடைïறு இன்றி நடைபெற வேண்டி வழிபடுதல். 4) கேது திசை நடப்பவர்கள் புற்று வழிபாடு செய்து நோய் வராமல் தடுக்கவேண்டுவார்கள். 5) நாக தோஷம் உள்ளவர்கள் அத்தோஷம் நீங்கப் புற்று வழிபாடு செய்வார்கள். 6) தொழு நோய் நீங்கவும் புற்று வழிபாடு செய்யப்படுகிறது. 7) குழந்தைகள் தோஷங்கள் காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் நலமுடன் வாழவும் புற்று வழிபாடு நடைபெறுகிறது

. நிவேதனம்– பிரசாதம்: நாக வழிபாட்டிற்கு என நிவேதனப் பொருட்கள் உள்ளன. நிவேதனம்: புற்று வழிபாட்டில் பாலும், வாழைப் பழத்துண்டுகளும் முக்கிய இடம் பெறுகின்றன. புற்று வழிபாட்டுக்குரிய காணிக்கைப் பொருட்களைக் கருப்புத்துணியில் வைத்து சந்தனம், பூ இவற்றுடன் சேர்த்துப் பொழுது சாயும் நேரத்தில் புற்றில் செலுத்த வேண்டும்.

பிரசாதங்கள்: நாகத்தை வழிபாட்டு தெய்வமாகக் கொண்ட நாகர்கோவில், கும்பகோணம் சங்கரன் கோவில் உள்பட சில தலங்களில் புற்று மண்ணே பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இத்தலங்களில் உள்ள புற்று மண் அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்கின்றன. இப்புற்று மண் பல வியாதிகளைக் குணப்படுத்துவதாக நம்புகின்றனர். சில இடங்களில் புற்றிலிருந்து எடுத்த ஒருவித மையைப் பிரசாதமாகக் தயாரித்து வழங்கும் வழக்கம் உள்ளது. இந்த மை பலவித வியாதிகளைக் குணப்படுத்துவதாகக் கூறுகிறார்கள்

. பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையது. குழந்தை இல்லாதவர்கள் நாகத்தை சிலை வடிவில் அமைத்து ஆறுமாதம் தண்ணீரிலும் ஆறுமாதம் நெய்யிலும் வைத்து பூஜை செய்து அரசமரத்தில் வைத்து வழிபடுவார்கள். நாக தோஷம் நீக்கும் நாகக்கன்னி வழிபாடு கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கொரநாட்டு கருப்பூர். இங்குள்ள சுந்தரேஸ்வரர் கோயிலில் பிராகாரத்தில் அஷ்ட நாகக் கன்னியருக்கு தனிச்சந்நதி உள்ளது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் பெட்டி காளியம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு நாகக் கன்னியருக்கு பாலாபிஷேகம் செய்தால் நாகதோஷம் முதலான சகல தோஷமும் விலகுகிறது.

நாகாத்தம்மன், முப்பாத்தம்மன், காளியம்மன், மாரியம்மன் என ஒவ்வொரு ஊரிலும் பல விசேஷ பெயர்களில் வீற்றிருக்கிறாள் சக்தி. திருவேற்காட்டில்தேவி கருமாரி அம்மன், நாக சக்தியாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். இத்தலத்தில் மிகப் பெரிய புற்றுக் கோயில் உள்ளது. பாற்கடலில் பரந்தாமன் பாம்பு படுக்கையில் பள்ளி கொண்டிருப்பதாக விஷ்ணு புராணம் விவரிக்கிறது. புராண இதிகாசகங் களின் படி சமுத்திரத்தின் அதள பாதாளத்தின் கீழே பூமியை தாங்கியபடி ஆதிசேஷன் இருப்பதாக பாகவத புராணம் உள்ளிட்ட பல புராணங்கள் கூறுகின்றன.

இதை சிலர் கட்டுக்கதை என்று சொல்வார்கள், ஆனால் நவீன விஞ்ஞான உலகத்தில் கடலுக்கு உள்ளே அதள பாதாளத்தில் ‘பாம்பு பாறை‘ இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!