மாதவரத்தில் இருந்தும் தென் மாவட்ட பேருந்துகள் .. அட்டவணை

 மாதவரத்தில் இருந்தும் தென் மாவட்ட பேருந்துகள் .. அட்டவணை

வட சென்னை மக்களுக்கு சிஎம்டிஏ குட்நியூஸ்.. மாதவரத்தில் இருந்தும் தென் மாவட்ட பேருந்துகள் .. அட்டவணை

வடசென்னை மக்களுக்கு வசதியாக மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ளது. எந்தெந்த ஊர்களுக்கு, எந்தெந்ந நேரத்தில் மாதவரத்தில் இருந்து அரசு பேருந்துகள் செல்லும் என்பதை வெளியிட்டது சென்னை மாநகர பெருநகர வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ வெளியிட்டுள்ளது.

சென்னையில் 30-1-2024 முதல் முழுமையாக கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரம் கிளாம்பாக்கம் என்பது சென்னையின் மையப்பகுதியான பாரிஸ் கார்னரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

இதனால் வட சென்னை பகுதியில் உள்ள தண்டையார் பேட்டை, ரெட் ஹில்ஸ், அம்பத்தூர், ஆவடி, கொளத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர், திருவெற்றியூர், மாதவரம், எண்ணூர், வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட ஒரு பாதி சென்னை மக்கள் சுமார் 30 முதல் 50 கிமீ வரை டவுன் பஸ்களில் சுமார் ஒன்றரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை பயணித்தே கிளாம்பாக்கம் வர வேண்டிய நிலை இருக்கிறது.

இந்நிலையில் வட சென்னை மக்களின் வசதிக்காக கணிசமான பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர பெருநகர வளர்ச்சி குழுமான சிஎம்டிஏ அறிவித்துள்ளது. திருச்சி, சேலம், திருவண்ணாமலை, அரியலூர், கும்பகோணம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி, வந்தவாசி, போளூர் உள்பட எந்த ஊருக்கு எந்தெந்த நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது

. இந்த பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னையின் வெளிவட்ட சாலை வழியாக வந்த நேரடியாக கிளாம்பாக்கத்தில் இணைந்து வழக்கம் போல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேருந்துகளை இயக்கும் சென்னை மாநகர பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நடவடிக்கையை பலரும் வரவேற்றுள்ளார்கள். மாதவரத்தில் எளிதாக பைப்பாஸ் வழியாக கிளாம்பாக்கம் வர முடியும் என்பதால் வட சென்னை மக்களும் எளிதாக இனி சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும் என்று என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை ஆந்திர பேருந்துகள் செல்லும் பேருந்து நிலையமாகும். இனி இங்கு தென்மாவட்ட பேருந்துகளும் கணிசமாக இயங்க உள்ளது. திருச்சியை பொறுத்தவரை காலை 6.15க்கு ஆரம்பிக்கிறது. கடைசி பேருந்து இரவு 10 மணிக்கு செல்கிறது. ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பேருந்து கிளம்பும். அதாவது 6.15 என்றால், அடுத்து 7.15, 8.15, 9.15 என கிளம்பும். அதேநேரம் பிற்பகலில் ஒன்றரை மணி நேர கால இடைவெளியும், இரவு 8மணிக்கு மேல் அரை மணி நேர இடைவெளியில் பேருந்துகள் திருச்சிக்கு மாதவரத்தில் இருந்து செல்லும்.

சேலத்தை பொறுத்தவரை முதல் பேருந்து காலை 6.30 மணிக்கும், கடைசி பேருந்து இரவு 9.30 மணிக்கும் புறப்படும். ஒரு மணி நேர இடை வெளியில் பேருந்துகள் செல்லும். இதேபோல் கும்பகோணம், திருவண்ணாமலை, புதுச்சேரி, அரியலூர், ஜெயகொண்டம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் கணிசமான நேர இடைவெளியில் இயக்கப்பட உள்ளது. இந்த செய்தியுடன் பேருந்து நேர கால அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது. இதில் அறியலாம். சிஎம்டிஏவின் இந்த முயற்சியை வடசென்னை பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...