இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி இயற்கை எய்தினார்

 இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி இயற்கை எய்தினார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலாமானார். அவரது வயது 47. இசைஞானியின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணியின் திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் இசையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

குடும்பம் முழுவதுமே இசைத்துறைக்கும் சினிமா துறைக்கும் உடல் பொருள் ஆவி அனைத்தையும் பல ஆண்டுகளாக வழங்கி வரும் நிலையில், புற்றுநோய் பாதிப்பால் பவதாரிணி உயிரிழந்தார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இலங்கையில் உள்ள மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விரைந்த இளையராஜாவின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

இளையராஜாவின் அன்பு மகளான பவதாரிணி அப்பா மற்றும் சகோதரர்களை போல பாடல்கள் பாடுவது, இசையமைப்பது என ரத்தத்திலேயே ஊறிய இசையை ரசிகர்களுக்கு விருந்தாக்கி வந்தார். ஆனால், திடீரென கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு அவரை கொஞ்சம் கொஞ்சமாக முடக்கியது. அதற்கான அடிக்கடி பல்வேறு சிகிச்சைகளை எடுத்து வந்தார் பவதாரிணி. ஆனால், கடைசி வரை எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை.

கடைசியாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து வெளிவந்து விடலாம் என்கிற நம்பிக்கையுடன் இலங்கைக்கு சென்று கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார் பவதாரிணி. ஆனால், அந்த சிகிச்சையும் பலனளிக்காத நிலையில், நேற்று அவரது இசை உயிர் பிரிந்து சென்று விட்டது.

மகள் பவதாரிணி மறைந்த செய்தி கேட்டதுமே இலங்கையில் உள்ள மருத்துவமனைக்கு இளையராஜா சென்ற காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. மருத்துவமனைக்கு தனது உதவியாளருடன் சென்ற இளையராஜா உயிரிழந்த தனது மகளை பார்த்து உடைந்தே போய் விட்டார்.

இளையராஜாவும் அவரது மனைவியும் மகளை பறிகொடுத்த சோகத்தில் கண்ணீர் விட்டு அழுது வருகின்றனர். சகோதரர்களான கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா சகோதரியின் மறைவு வேதனையால் மனமுடைந்து போயுள்ளனர். இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று பவதாரிணியின் உடல் இறுதிச்சடங்கிற்காக கொண்டு வரப்படுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...