கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள் (செப்டம்பர் 16) நிகழ்வு ஒரு நாள் முன்னாதாக நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் சென்னை படைப்பு அரங்கத்தில் கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் ‘ஓலங்கள் சூழலும் உடைந்த இசைத்தட்டு’ என்ற கிருபாவின் கையெழுத்து பிரதியோடு கூடிய கவிதை தொகுதி வெளியிடப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கவிஞர் இந்திரன் Indran Rajendran கவிதைகளை தொகுத்த கிருபாவின் நண்பர் பட்டுராஜன், திரைப்பட நடிகர் ரவி, நிகழ்வை ஒரு நிலைத்த படைப்பு குழுமம் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் ஜின்னா ஆஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் ‘காற்றைப் போல மழையைப் போல… வெயிலை போல…’ என்ற பா.விவேக் இயக்கத்தில் உருவான பிரான்சிஸ் கிருபாவை பற்றிய ஆவணப்படமமும் திரையிடப்பட்டது.
ஏராளமான கிருபாவின் நண்பர்கள் ரசிகர்கள் கவிதை ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு உணர்வு பூர்வமாக அமைந்தது. அரங்கம் நிரம்பி வழிந்தது.
பேசிய ஒவ்வொருவரும் பிரான்சிஸ் கிருபாவின் வாழ்வே கவிதையாகவும், கவிதையை வாழ்வாகவும் அமைந்திருந்தை எடுத்துக் கூறி மகிழ்ந்தனர்.
ஒரு கவிஞனை நினைவு கூற இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று பெருமிதமாக எண்ணும்படி நிகழ்ச்சி அமைந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட நிமிடங்களில் உண்மையில் கிருபாவை மீண்டும் டிஸ்கவரி புக் பேலஸ் அருகே உள்ள டீக்கடையில் சந்தித்து அணைத்துக் கொள்வதைப் போல உணர்ந்தேன்.
நூலில் இருந்து ஒரு கவிதை:
“ஒற்றை உயிரை வைத்து
சூதாடிக் கொண்டிருக்கிறேன்
கண்டிப்பாக யாரும்
என்னிடம் தோற்று விடக் கூடாது என்ற
எச்சரிக்கையோடு.”
இவனைத்தான் நாம் இழந்து விட்டோம்.
*
பிருந்தா சாரதி