புரோட்டின் லட்டு
புரோட்டின் லட்டு செய்முறை——
பொட்டுக்கடலை ஒரு கப்,உளுத்தம் பருப்பு ஒரு கப், முந்திரிப் பருப்பு 10, பாதாம் பருப்பு 10, ஏலக்காய் 3, நெய் 4 கரண்டி, சர்க்கரை தேவையான அளவு , உப்பு ஒரு சிட்டிகை.
பொட்டுக்கடலை உளுத்தம் பருப்பு, முந்திரி மற்றும் பாதாம் பருப்பு ஏலக்காய் இவை அனைத்தும் பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவில் நாலு தேக்கரண்டி நெய் விட்டு ஒரு சிறு அளவு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
கையில் சிறிதளவு நெய்யை தடவிக் கொண்டு அந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் அதை நல்ல ஏர் டைட் கண்டெய்னர் பாக்சில் வைத்து ஒரு வாரத்திற்கு உபயோகப்படுத்தலாம்
குழந்தைகளுக்கு மிகவும் இது பிடிக்கும் குழந்தைகளுக்கு தினம் ஒரு உருண்டை கொடுத்து வந்தால் அவர்கள் ஊட்டச்சத்து அதிகரிக்கச் செய்யும்.
—Divanya prabhakaran