புரியாத புதிர்/சிறுகதை/-உமாகாந்தன்

 புரியாத புதிர்/சிறுகதை/-உமாகாந்தன்

சிறுகதை

‘வசந்தி  இதன்  உன் பைனல்  முடிவா ப்ளீஸ் நாம மறுபடியும் சேர்ந்து  வாழலாம்’

‘வேண்டாம் விமல். இது என்னோட தீர்மான முடிவு  சரியாத்தான் முடிவு எடுத்து  இருக்கேன்’

‘வசந்தி ப்ளீஸ்  உங்க முடிவை மறுபரிசிலனை பண்ணலாமே எனக்காக’ என்றேன் நான்

 வசந்தி! வசந்தி ! வசந்தி !  விமல்!  விமல் !விமல் !

கோர்ட் பீயூன் அழைக்க , ஜட்ஜ் முன் சென்றார்கள்.

இந்நேரம் நீங்க யூகித்து இருப்பீங்க .இது டிவோர்ஸ் கேஸ்னு.

‘உங்க ரெண்டு பேருக்கும்  மியூச்சவல் டிவோர்ஸ் கேட்டு இருக்கேங்க. சம்மம்தானே ‘என ஜட்ஜ்  கேட்க

‘எனக்கு  முழு சம்மதம் ‘இது வசந்தி

வேற வழி இல்ல

‘விமலும் சம்மதம்’ என்றான்.

ஜட்ஜ்  கையெழுத்து போட்டுட்டு அடுத்த  கேஸ் என்ன என்றார் உதவியாளரிடம்.

‘ ரமேஷ்  நீங்க வெளியே வெயிட் பண்னங்க நானும் விமலும் இந்தபார்மாலிட்டிஸ்  முடிச்சுட்டு வர்றோம்’ என வசந்தி  சொல்ல’ சரி’ யென்றேன்.

விமல் என்னோட  உயிர் நண்பன் .சம வயது இருவரும் 30ல்இருக்கோம்.

நாங்க ரெண்டு பெரும் ஒரே ஏரியா, ஸ்கூல் பிரண்ட்ஸ் அவனக்குனு நான் ஒருத்தன் தான் பிரண்ட் ,ரொம்ப ரிசவர்டு அவன் .

 வசந்தியை அவன் காதலித்த பிறகுதான் எனக்கு வசந்தியை தெரியும்.   இவங்க காதல் செய்தது  மூன்று மாசங்கள்  .திருமணம் செய்து வாழ்ந்தது  மூன்று மாசங்கள் ..அடுத்த மாதங்கள்  சண்டை .அப்புறம்  டிவோர்ஸ் கேஸ் 9 மாதங்கள் ஒடிய பின் இன்னிக்கு ஆர்டர் வந்தாச்சு .பிரியப்போறாங்க.

விமலுக்கு அம்மா மட்டும்தான் .சென்னை வாசி .அவன் அப்பா சின்னவயசிலே இறந்துட்டார்.  அவனுடைய அம்மாதான்  அவனை மிகவும் கஷ்ட்டப்பட்டு படிக்கவைத்து ஆளாக்கினாங்க. அதான் அவனுக்கு  எல்லாம் அம்மாதான்,ஒரு சின்ன சொந்த வீடு இருக்கு .

அவன்  எம். எஸ்சி.   ஸ்டேட் பர்ஸ்ட்.  அவனுக்கு நிறைய  ஜாப்ஸ் ஆப்பர் கிடைத்தது . எல்லாம் மற்ற  ஸ்டேட்களிலிருந்து .அம்மாவை பிரிய மனம் இல்லாமல்  எல்லா வேலைகளை உதறிவிட்டு இங்கே ஒரு மெடிகல் கம்பெனியில்  சேல்ஸ் ரெப்ரெசன்டெட்டிவாக மாசம் இருபதாயிரத்துக்கு வேலைக்கு போய்க்கொண்டு இருக்கிறான். நான்  பத்தாவது பாஸ் .அதற்கு பிறகு  படிப்பு ஏறாததால் , பிசினஸ்ல  இறங்கிட்டேன்.

விமல் நல்ல பையன்தான் பாக்கியராஜ் போல பெண்கள்  பக்கமே போகமாட்டான். ஆனா உள்ளுக்குள் ஒரு பெண்ணையாவது காதலிக்கனும்னு  ஆசை .ஆசை இருந்த அளவுக்கு தைரியம் இல்ல. பெண்கள் முகத்தை பார்த்து பேச மாட்டான், 96  விஜய் சேதுபதி போல

வெளியே வந்தார்கள், வசந்தியும் விமலும்.

‘ரமேஷ் உங்க நண்பரை உங்க கிட்ட கொடுத்திட்டேன் .பத்திரமா பார்த்துக்கோங்க. நான் வரேன்’ சொல்லி கொண்டேவசந்தி  கிளம்பத்தயாரானாள்.

‘அதற்குள்ளகவா’  விமல்

‘வேற என்ன இருக்கு’

 ‘வசந்தி கொஞ்சநேரம் பேசலாம் வாங்க காப்பி சாப்பிட்டுக்கொண்டே ‘என்றேன்

 கோர்ட்வளாகத்திலுள்ள கேண்டீனுக்கு சென்றோம்

‘என்ன சாப்பிடறீரீங்க’

‘எதுவும் வேணாம்’ ரெண்டு பேரும் ஒரே  நேரத்தில்

நான் காபி ஆர்டர் பண்ணிட்டு அவங்ககிட்ட நான் ஒரு  போன் கால் பேசனும்னு சொல்லிட்டு அவங்களை தனியே விட்டு விட்டு வந்தேன்

அவர்கள் காதல்  திருமணம் என முடிவான பின் விமல் என்னிடம் வந்து அம்மாக்கிட்ட பேச சொன்னான் ,அது வரைக்கும் அவன் வசந்தியை காதலிப்பதை சொல்லவேயில்லை ‘

அப்பதான் நான் வசந்தியை  பார்த்தேன்’

ஒரு ஐ.ட்டி கம்பெனியில் நல்ல  வேலை  அதான் புராஜக்ட் என்ஜீனியர் . மாசம் எண்பதாயிரம் சம்பளம்’ ,பூர்விகம் திருச்சி ,அப்பா அம்மாவுக்கு ஓரே பெண். அவங்க திருச்சியிலே இருக்க வசந்தி இங்கே விமன்ஸ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கா’

நான்  அவனை கேட்டேன்.’ உனக்கு இஸ்டம்தானே .ஏதாவது கண்டிசன்ஸ் சொன்னாங்களா’’

‘அவ வேலைக்கு  தொடர்ந்து போவாளாம் . அடிக்கடி  ஷிப்ட் மாறும் .இரவு பகல் பாக்கமல் வேலை இருக்கும்  சனி  ஞாயிறுதான்  பிரீயாக இருக்கமுடியும் .அலுவலகம் சம்பந்தமாக சில சமயங்களில் மற்ற ஸ்டேட்களுக்கு போகவேண்டியிருந்தால் அங்கேயே தங்கவேண்டியிருக்கும் , அதை தடுக்க கூடாது.மற்றபடி வேறு ஏதும் சொல்லலை’ என்றான்

வசந்தி, இதை  அவன்கிட்ட முதலிலியே சொன்னது சரியான செயல்தான் என நினைத்தேன்.

பிறகு நான் அவன் அம்மாகிட்ட பேசினேன்.

முதலில் சம்மதம் தரலே .வசந்தியை நேரில்பார்த்தவுடன் சரி என சொல்லிட்டாங்க. நான் வசந்தி அப்பா அம்மா இவர்களிடம் நேரிலே பேசினேன்.

அவங்க வசந்தி  சம்மதம்னா , எங்களுக்கு சம்மதம் அவ அவ மேல எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு என்றார்கள்.

பிறகு என்ன அவங்க கல்யாணம் ஒரு கோயிலில் மிக எளிய முறையில் நடந்ததது.

உறவினர்கள் நண்பர்களுக்காக ஒரு நல்ல ஹோட்டலில் ரிசப்சன் . ஊரே இந்த ஜோடி பொருத்ததை பார்த்து அசந்ததது

அப்படி ஒரு பொருத்தம்.

‘ரமேஷ்  வாங்க காபி   வந்துட்டது ‘வசந்தி கூப்பிட போனேன்

 சாப்பிட்டோம்  .’நான் வரேன் ‘விமல், ரமேஷ்  பை’  என சொல்லிட்டு வசந்தி கிளம்ப தயாரானாள்.

‘வசந்தி நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியாக பேசனும்’ என்றேன்

‘நான் விமல் கிட்ட எல்லாம் சொல்லிருக்கேன்  உங்க நண்பர் கிட்ட கேட்டுக்கோங்க ‘

‘வசந்தி வீட்டுலே நீ  வாங்கி கொடுத்த பிரிட்ஜ்,வாஷிங் மெசின் .டிவி லாம் இருக்கு .நான் இதல்லாம் திருப்பி தந்துடறேன்  எங்கேனு  சொல்லு’ என விமல் கேட்க

‘சே!  போயும் போயும் உன்  அற்பத்தனத்தை காண்பிச்சுட்டே.இதலாம் பார்த்தா லவ் பண்ணே நீ

உன்னைபோய் நான் காதலிச்சேனே’

அவனை திட்க்கொண்டே தன்  காரை வேகமாக  ஸ்டாடர்ட் பண்ணி போய்விட்டாள்.

எனக்கும் அவன் மேல் கோபம் வந்து ‘நீ யெல்லாம் ஒரு மனுசனா’ என கத்தினேன்

பிறகு சமாதானம் அடைந்து   அவ என்னடா  சொன்னா உன்கிட்ட ‘ ‘அதுவா  ரமேஷ்.  நாம்  மறுபடியும் சேர்ந்து  வாழலாம், நடந்தையெல்லாம் மறந்துடுனு கேட்க அவ அதுக்கு     ‘நான் உங்களை காதலிச்சு உண்மையான காதல்.உன்னை தவிர வேறு யாருக்கும் என் மனசில் இடமில்லை உன்னை நான் முதன் முதலா சந்தித்த போது உன் மென்மையான குணம் மற்றும்  பெண்களை மதிச்ச  பண்பு என்னை  ஈர்த்தது .அதான்  நான் வலிய வந்து உன்னை   காதலிச்சேன் .இப்போவும் அது மாறல  ..ஆனா  நீ மாறிட்டே .உங்க அம்மா  முன்னாடி  நீ  நடந்ததை நான் மறக்கலே, ஒரு பெண் ஆபிசில வேலை பாக்கறபோது பல ஆண்களுடன் பேச வேண்டியிருக்கும் பழக வேண்டியிருக்கும் .பல இடங்களுக்கு சில நாட்களில் அவர்களுடன் பயணம் பண்ண வேண்டியிருக்கும் என நான் உனக்கு  முன்பே சொன்னதுதானே .ஆனா நீ அன்னிக்கு ஒரு கேள்வி  கேட்டே இன்னிக்கு எவனோட சுத்திட்டு  வர , அதை நான் இந்த  ஜென்மத்துக்கும் மறக்கல’ என சொன்னாடா, நான்  மறுபடியும் கெஞ்சினேன்   ‘.என்னை மன்னிச்சுடு ஒரு வருசமோ இரண்டு வருசமோ உனாக்காக நான் வெயிட் பண்றேன்’ என்றேன் என சொன்னான்

‘பார்க்கலாம்  உங்க மனநிலை எப்படி ற்கு இருக்குனு ‘பாக்கறேன்

‘இதாண்டா பேசினோம்’ என்றான்

எனக்கு  சிறிது நம்பிக்கை துளிர்த்தது  அவங்க  மறுபடியும்  சேரலாம்  என

‘சரியாத்தான் சொல்லி இருக்கா’  என்றேன்

     இதற்கப்புறம் நான்  என் பிசினஸ்  விஷயமாக  6 மாதங்கள் மலேசியாவில் இருந்தேன்.

திரும்ப வந்தபோது விமல் ,வசந்தி இவர்களை பல முறை தொடர்பு கொண்டும் அவர்களை தொடர்பு கொள்ள முடியல.

வசந்தி  தன் வேலை தொடர்பாக லண்டன் போய்விட்டதாக அவங்க அலுவலகத்தை தொடர்பு  கொண்டபோது அறிந்தேன் விமல் தன் வீட்டை விற்று விட்டு போய்விட்டதாக அவன் வீட்டுக்குபோன போது பக்கத்து வீட்டார் சொன்னார்கள்.

இப்படியே  ரெண்டு வருடங்கள் போயிடுச்சு .

தீடிர்னு என் செல் போன் ஒலிக்க

‘அலோ ரமேஷ் நான் வசந்தி ‘ என ஒரு புது நம்பரிலிருந்து வசந்தி பேச மனம் துள்ளியது ‘ ஹாய் வசந்தி’  என்றேன்

‘ நாம நேரிலே பேசலாம்  நாம எப்பவும் மீட் பண்ற  ரெஸ்டாரண்டுக்கு இன்னிக்கு சாயந்தரம் 5மணிக்கு வாங்க’ என

 மாலை சந்தித்தோம்.

வசந்தி அப்படியே தான் இருந்தாள் .நான் முதன் முதலாக விமல்  அறிமுகப்படுத்தியபோது எப்படி இருந்தாளோ அப்படியேதான்

அவ அழகே தனி, சாதரணமாக வந்தாலே பலரை திரும்ப பார்க்க வைக்கும் அழகு ,இவளுடைய அழகுக்கு விமல் மேட்ச் இல்லைதான்

‘ஆபீஸ்  ப்ரொஜெக்ட்க்கு லண்டனுக்கு அவசரமாக நான் உடனே  போக வேண்டியதால் உங்க கிட்ட சொல்ல முடியல .பிளைட்ல செல்போன் தொலைந்து போக யாரையும் தொடர்பு கொள்ள முடியல.

விமலை தவிர .ஆனா அவர் நம்பர் எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் எனதான் சொல்லுது நீங்க எப்படி இருக்கீங்க,உங்க நண்பர்  என்ன பண்றார் .என் மாமியார் எப்படி இருக்காங்க’ என பல கேள்விகளை அடுக்கினாள்

‘வசந்தி  அவனை  ஆளயே  காணோம் . .அவன் வீடு பூட்டி இருந்தது பற்றி சொன்னேன் .அவன் மொபைல் எண்  ஒர்க் ஆகல ,எப்போதும் தொடர்பு  எல்லைக்கு அப்பால் இருக்குனு தான் வரும்’ என்றேன்

 நாங்க காபி  சாப்பிட்டு கொன்டு இருந்த பொது  ஒரு பேமிலி கணவன் மனைவி குழந்தையுடன் எங்களை கடக்க நான் அந்த கணவன் கிட்ட தட்ட விமல் போல இருந்ததை கவனித்து வசந்தியிடம் சொல்ல

கடைசியிலே அவன் விமல்தான் என தெரிந்து எங்களுக்கு

‘டே  விமல்’ என கூப்பிட்டேன்

கொஞ்சம் கூட ஆச்சரியப்டாமல் ‘ வசந்தி ரமேஷ் எப்படி இருக்கீங்க ‘என்ற அவனை  ‘இது  யாரோட குழந்தை’ என கேட்டேன்

‘என்  குழந்தைதான் எனக்கு கல்யாணம்  ஆயிடுச்சு  அம்மா ரொம்ப கம்பல் பண்ணி அவங்க துரத்து உறவாம் நல்ல வசதி மதுரையிலே ,கல்யாணம் ஆகி ஒன்றை வருடம் ஆச்சு. எங்களுக்கு  பிறந்தவன் இவன் என்றான் சரி  வர்றேன்  அவ கோவிச்க்குவா’ என்றான்

ஆளே மாறிட்டான்  எங்களை பற்றி  எதுவும் கேட்கல வசந்தியை பாக்கக்கூட இல்ல அவன்

‘அம்மா எப்படிடா இருக்காங்க’ என கேட்டேன்

‘  நாங்க மதுரைல இருக்கப்போவதால் அவ சொன்ன அம்மா எதுக்கு மதுரைக்குனு வீட்டை விற்று விட்டு  அம்மாவை இங்கே அடையாறுலே  ஒரு முதியோர் இல்லத்துல விட்டுடேண்டா ‘என்றான்

அவனை ஓங்கி ஒரு அறை விடனும் போல்தோணிச்சு

‘அவன்  பொண்டாட்டி.உடம்பு முழுக்க நகை.வந்தவ  என்னங்க  இங்கே யார் கிட்ட பேசிகிட்டு  இருக்கீங்க  வாங்க இங்கே’  சத்தம்போட பெட்டிப்பாம்பாக அடங்கி அவள் பின்னால் தன் குழந்தையை துக்கிக்கொண்டு  ஓடினான்

‘அந்த முதியோர் இல்லம் பேர்என்னடா  எனநான் கேட்க சொல்லிக்கொண்டே போய்விட்டான்

வசந்தி முகத்தை பார்க்க எனக்கு வெக்கமாக இருந்தது. அவனை நண்பன் என் சொல்லிகொள்ளவும்தான்

‘சாரி .வசந்தி  நான் இப்படி ஆகும் என நினைக்கல ,நான்  வரேன் .இனிமே பேச ஒண்ணுமில்ல ஆனா ஒரேயொரு ரெக்வஸ்டு ‘

‘ தெரியும் நீங்க என கேட்பீங்கவென  .ஒரு வேளை நான்  விமலை  பார்ப்பதற்கு முன்பே நான் உங்களை மீட் பண்ண சந்தர்ப்பம் கிடைத்திருந்தால்  நான் உங்களை காதலித்து  இருப்பேன் போல இப்போ நான் எந்த  மனநிலையுமில்லை .விமல் திரும்ப வருவார் என நம்பினேன் . அது இல்லனு ஆயிடுச்சு .கல்யாணம்தான் பெண்களுக்கு பாதுகாப்புனு சொல்வீங்க அப்ப  ,என் கல்யாணம் என்ன ஆச்சு  என்னைப்போல பல பெண்கள் வாழ்க்கை இருக்கு ரமேஷ் .விமலைப்போல பலர் இங்கு சுயநலவாதிகளாக இருக்காங்க நான் பொதுவாகதான் சொன்னேன் ,

நான் ஏமாந்து போய்விட்டேன் ..இன்னொருத்தனை நான் பாதுகாப்புனு நினைத்து கல்யாணம் பண்ண நினைச்சா அவன் நிச்சயமாக என் மாச சம்பளத்துக்காவே தான் வருவான், கொஞ்ச நாள் கழித்து விமலைப்போல  இன்னிக்கு எவனோட சுத்திக்ட்டு இருந்த என ஒரு படி மேல போயி எவனோட    …..டுத்துக்கிட்டு இருந்தேனு கேட்கற நிலைமை கூட வரலாம் நல்லவேளை எனக்கு  குழந்தை பிறக்கல . அது பிறந்து இருந்தா அதன் வாழ்க்கை மிக மோசமாகியிருக்கும்

என்னால் ஒன்னும் பதில் பேச முடியல

 ‘ஆனா இப்போ எனக்கு ஒரு நல்ல பாதுகாப்பு கிடைக்கபோறது, இனி என் வாழ்க்கை அவங்களோடதான்’ ..வசந்தி தொடர

நான் புரியாமல் விழிக்க’ நாம இப்ப அந்த  அடையாறு  முதியோர் இல்லம் போறோம் என் மாமியாரை இனி நான் பாத்துக்கப்போறேன் ‘என சொல்ல என்னையறியாமல் என்கைகள் அவளை கும்பிட்டன.

video

  -உமாகாந்தன்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...