சல்லிக்கட்டு பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன் |
முருகு தமிழ் | சல்லிக்கட்டு பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன் |
*சல்லிக்கட்டு பாடல்*
*** சல்லிக்கட்டு காளை – இது
சல்லிக்கட்டு காளை
! தில்லிருந்தா தொட்டுப்பாரு
திமிலுக்கு மேல!
அல்லியனா நிக்கு து பார்
யானையினைப் போல!
சொல்லிப்புட்டேன் பயமிருந்தா
ஓடிவிடு தூர!
மச்சக்காளை மயிலக்காளை
மஞ்சுவிரட்டுக் காளை!
அச்சம் விட்டு ஆசையிருந்தா
அசைச்சுப்பாரு வால!
( சல்லி)
கொம்பைக் கண்டால்
கூட்டமெல்லாம்
குலை நடுங்கிப் போகும்
! அம்பைப் போன்ற
கூர்மையாலே
ஆளைச் சாய்ச்சிப் போடும்
! வம்புக்காகப் போட்டி
போட்டு வந்து மாட்டிக்காதே
! தெம்பு காட்டித் திமிரெடுத்து
சீவன் விட்டுடாதே
! காரிக்காளை காலன் போலக்
காவு வாங்கத் தாவும்!
தேரிக்காட்டுத் தேவு போலத்
தேடித் தேடிப் பாயும்!
(சல்லி)
வாடிவாசல் வந்து நின்று
வட்டமிடும் வேளை!
கோடி பேராய் வந்த போதும்
குத்திச் சாய்க்கும் மூலை
! கூடி வந்த கூட்டத்தையும்
கூறு செய்யும் தேய!
தேடி வந்து குரல் கொடுத்தா
செல்லமாகும் ஓய!
மண்ணின் மாண்பு காத்து நிற்கும்
மஞ்சுவிரட்டுக் காளை!
எண்ணில் அடங்கா
வரலாற்றையும் ஏற்றிருக்கும்
காளை!
(சல்லி)
அருஞ்சொற்கள் அல்லியன்..
.கூட்டத்தை விட்டு விலகி
வந்ததனியானை தேவு..
. தெய்வம்
பாடல், இசை, குரல் முனைவர் பொன்மணி சடகோபன்