வாழை ப்பூ சாப்பிடுங்க

வாழை ப்பூ சாப்பிடுங்க

வாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும்.  வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த  விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை  கசக்கிப் பிழிந்து  எடுத்துவிடுகிறார்கள்  நம்மில் பலர்.  துவர்ப்பு இருந்தால்,  சுவையிருக்காது என்று நினைத்து  அதனுடைய  சத்தையெல்லாம்  சாக்கடைக்கு  அனுப்பி  விடுகிறார்கள். அந்தத்  துவர்ப்பு இருந்தால் ஊட்டச்  சத்து வீணாகாமல்  உடம்புக்கு ‘பி’வைட்டமின் கிடைக்கிறது.  பல வியாதிகளும்  இதனால் நிவர்த்தி அடைகிறதுஎன்பதை அறிய வேண்டும்.

வாழைப்பூவின் பயன்கள்(BENEFITS):

மாதவிடாய்(Menstrual Problems) பிரச்சனைகளைச் சரிசெய்யும்.

உடல் அசதி, வயிற்றுவலி, சூதக வலி குறையும். நாளடைவில் மறையும்.

இரும்புச்சத்து(Iron) இருப்பதால், இரத்தசோகையைக் (Anemia) குணமாக்கும்.

அல்சர் பிரச்சனைகளைச்(Ulcer Problems) சரிசெய்யும்.

வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் (Piles) வெகுவிரைவில் குணமாகும்.

மலச்சிக்கலைத் (Constipation) தீர்க்கும்.

வறட்டு இருமலும் மறைந்து விடும்.

மக்னிஷியம்(Magnesium) இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை (High Blood Pressure) சீராக்கும்.

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை(Kidney) மேம்படுத்தும்.

அஜீரணக் கோளாறு,வயிற்றுக்கடுப்பு, சீதக்கழிச்சல் ஏற்படும்.

நல்ல உணர்வுகளைத்(Good Feel) தரும்.

கர்பப்பை (Uterus)ஆரோக்கியமாகும்.

பாலூட்டும் தாய்மார்களுக்கான சிறந்த உணவு.

சர்க்கரை நோயாளிகளுக்கு (Diabetes) நல்லது.

வயிற்று வலி, கை, கால் வலிகள் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!