கற்றாழை கடவுளின் வரம்
பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில் 25 முதல் 28 சதவிகிதமும், அலோ பெராக்ஸ்-ல் 10 சதவிகிதமும் உள்ளது. எப்பொழுதும் வாடாத பெரணி வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்கூடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன.
கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது. தளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்ந்தவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.
சோற்றுக் கற்றாழை மடல்களாப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையைக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.
கற்றாழையின் பயன்கள்/Benefits of Aloe Vera
மலச்சிக்கல்(Constipation) பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வரலாம். மேலும் கற்றாழை ஜூஸ் மலக்குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். உங்களுக்கு செரிமான கோளாறுகள் அடிக்கடி ஏற்படுமாயின், தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் செரிமான பிரச்சனைகள்(Digestion) நீங்குவதோடு, வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் விலகும்.
கற்றாழை ஜெல்(Gel) சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள்(Diabetes) கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வருவது நல்லது. ஏனெனில் கற்றாழை ஜூஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க உதவும்.
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், தினமும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் கற்றாழை ஜூஸில் உள்ள சேர்மங்கள், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களை (Toxin) முழுமையாக வெளியேற்றிவிடும்.
கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் (Metabolism)அதிகரித்து, கலோரிகள்(Calories) எரிக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், உடலினுள் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்கள்(Damaged Tissues) புதுப்பிக்கப்படும்.
இரத்த அழுத்த(Blood Pressure) பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
கற்றாழை சோற்றை உள்ளுக்கு கரண்டியளவு சாப்பிட்டு வர வெப்ப நோய்கள்(Heat Illness) யாவும் தீரும்.
இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு (Menstrual problems)தொடர்பான நோய்களுக்கு, சோற்றை சர்க்கரையுடன் கலந்து நன்றாக மிக்சியில் அரைத்து,கரண்டியளவு சாப்பிட தீரும்.
உடலில் கஸ்தூரி மணம்(Fragrance) வீசும். சருமம் வறண்டு(Dryness) போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வரஉடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால்தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள்மறைந்து போகும்.
இதன் ஜெல்லை முகத்தில் (Face wash) முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.
கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன்(Coconut oil) கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி (Hair growth)நன்குசெழித்து வளரும்.
காலை வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் தினம் சாப்பிட்டு வர உடலில் சத்து(Strength) கூடும்; உடல் பருக்காமலே. பலகீனம் மறையும் தாதுவிருத்தி ஏற்படும். பிள்ளைப் பேறு வேண்டுபவர்கள் கூட இதை சாப்பிட்டுவந்தால் நாளடைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம்.
வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி(Eye), கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதிவெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடிகண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்தநிறமும் மறைந்து விடும்.
இரவு படுக்கும்முன் கற்றாழையின்நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக்கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாதவெடிப்புகளும் (Foot krack)குணமாகும்.
வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள கூழ் (Ligment)போன்ற திரவம் குறைகிறது.இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது. இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன் சர்ம நோய்களையும் குணப்படுத்துகிறது.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள்(Blackheads), தழும்புகள், வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும், சிறிது கற்றாழைச் சாற்றைத் தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு (Glowing) பெறும்.
கற்றாழைச் சாறு போதையை(Addictive) நீக்க செயலாக செயல்படுகிறது.
