நூற்றாண்டுகளாக தொடரும் நிலத்திற்கான உரிமை போராட்டம்

 நூற்றாண்டுகளாக தொடரும் நிலத்திற்கான உரிமை போராட்டம்

நூற்றாண்டுகளாக போராடிய மக்களின் வரலாறு பஞ்சமி நிலச்சட்டம். தென்னிந்திய நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கிராமத்திலும் விவசாய நிலம் என்பது பொதுசொத்தாகி அதில் விளையும் பலனில் அரசுக்கான வரியைக் கட்டும் மிராசு முறை இருந்தது ஆங்கிலேயர்களின் புதிய நிலவுடமை கொள்கைளை வகுத்தனர். அதுவரையில் செயல்பட்டு வந்த மிராசு முறையில் ஆட்சிமாற்றம், தொடர் படையெடுப்பு போன்றவற்றால் மிராசு முறைமைகளில் மாற்றம் ஏற்பட்டது.

மும்முறை சாகுபடி தமிழகத்தில் நடைபெற்றது. அதன்படி பொதுச் சொத்தாக இருந்த நிலம் தனித்தனியாக மாற்றப்பட்டது. மிராசுகள் ஆட்களை வைத்து விவசாயம் செய்ய, அவர்களுக்கு தினக்கூலி வழங்கப்பட்டது. அவர்கள் ஊருக்கு வெளியே தங்க வைக்கப்பட்டனர்.

இரண்டாவது பங்கு சாகுபடி, ஊருக்கு வெளியே வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் விவசாயம் பார்த்து வரும் விளைச்சலில் கூலியை பயிராக பங்கு போட்டு கொள்வது. இதிலும் உழைப்பவர்களுக்கு சமமான பங்கு இல்லை, குத்தகை, பயிருக்கான செலவு, நிலம், மற்றும் கிணறு பராமரிப்பு இவையெல்லாம் போகவே கூலி வழங்கப்படும். இதற்கு பறக்குடி வாரம் என்று சொல்லப்பட்டது. இங்கு வேளாண் செய்யும் மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.

மூன்றாவது குத்தகை முறை விவசாயம் மிராசுகள் இல்லாத இடைநிலை சாதியினர் அவர்களின் நிலங்களில் செய்யப்பட்ட விவசாயம். இங்கு அடிமை முறைகள் கடைபிடிக்கப்படவில்லை.

விவசாயிகள் தாழ்ப்பட்டவர்களாகவும், செருப்பு அணியக்கூடாது மேல்சட்டை இடக்கூடாது, பெரிய மனிதர்கள் வீடுகள் இருக்கும் சாலையின் வழி நடக்ககூடாது என்றெல்லாம் அடிமைப் படுத்தி தீண்டாமைக்கு வழிவகுத்தனர். அப்படி ஊருக்கு வெளியே வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

நிலத்திற்கான தேவையும் அதன் போராட்டமும் 1820களில் தொடங்கியது 1839 ஆகஸ்ட் மாதம் புறப்போக்கு நிலத்தை சொந்தம் கொண்டாட மிராசுதாரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் நிலங்களை உரிமை கொண்டாடுவதை மிராசுகள் விரும்பவில்லை, விளைச்சல் உள்ள நிலங்கள் தங்களுக்கும் தரிசு நிலங்கள் கீழ்ச்சாதியினர் கைகளுக்கும் கிடைக்கப்பட்டது.

ஜேம்ஸ் ஹென்றி அப்பெர்லெய் 1878ல் மதராஸ் மகாணத்தில் (அப்போதைய சென்னையின் பெயர்)பணியில் அமர்த்தப்பட்டார். 1891 ல் செங்கல்பட்டு அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மக்களின் வாழ்வாதார முறையினைப் பற்றிய கள ஆய்வினை மேற்கொண்டு 17 பக்க அறிக்கை ஒன்றை தயார் செய்து இங்கிலாந்திற்கு அனுப்பினார்.

மிகுந்த கீழ் நிலைக்கு தள்ளப்பட்ட மக்களை மீட்க நிலம் ஒன்றே வழி என்று அவரின் அறிக்கை உணர்த்தியது. எனவே இங்கிலாந்து நாடாளுமன்றம் 1892ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி பஞ்சமி நிலத்திற்கான சட்டத்தை கையொப்பம் இட்டது.

அந்த பஞ்சமி நிலச்சட்டங்களும் விதிமுறைகளும் :

10ஆண்டுகள் வரை தங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை வேறுயாருக்கும் விற்கவோ அடமானம் வைக்கவோ கூடாது, அதையும் மீறி செய்யப்படும் மாற்றங்கள் செல்லுபடியாகாது.

தாழத்தப்பட்ட மக்கள் தங்கள் தேவைக்காக நிலத்தை அடமானம் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து மீண்டும் மிராசுகளிடமே சென்றார்கள். நிலங்களை மிகவும் குறைந்த விலையில் விற்றார்கள். வறுமையில் ஒரு பை அரிசிக்காக கூட நிலங்களை விற்ற நிலைமை இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் காரணைப் பகுதியில் தங்கள் நிலங்கள் ஏமாற்றப்பட்டு பறிக்கப்பட்டு விட்டன அதை மீட்டுத் தரவேண்டும் என்ற போராட்டம் நடத்தினார்கள் மக்கள்.

அந்த போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என்று பாராபட்சமன்றி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதன் பின்பு தமிழகம் முழுவதும் பஞ்சமி நிலங்கள் மீட்கும் போராட்டம் மட்டும் தொடர்கதையாகிக் கொண்டே தான் இருக்கிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...