புகார் கொடுத்த ஜியோ பதிலடி கொடுத்த ஏர்டெல்,வோடபோன்,பி.எஸ்.என்.எல்
ட்ராய் அமைப்பின் சேர்மேன் ஆர்.எஸ்.ஷர்மாவிற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எழுதிய கடிதத்தில் இண்டெர் கெனெக்ட் எனப்படும் மற்றொரு நெட்வோர்க்குகளுடன் அலைபேசி சேவையை இணைப்பதன் மூலம் பெறப்படும் லாபத்திற்காக லேண்ட்லைன் எண்களையே மொபைல் எண்களாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது என்று கூறியுள்ளது.
“தொலைத்தொடர்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத ஏர்டெல், வோடபோன், மற்றும் பி.எஸ்.என்.எல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறியதால் அந்நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். இவர்களின் தவறான கொள்கைகளால் அரசாங்கத்திற்கும் ஜியோ நிறுவனத்திற்கும் ஏற்பட்ட நஷ்ட ஈட்டினை உடனே திருப்பி வழங்க வேண்டும்” என்றும் புகார் அளித்துள்ளது.மொபைல் மற்றும் லேண்ட்லைன் என இரண்டுக்கும் இருக்கும் தன்மையை மாற்றுவது என்பது சட்டத்திற்கு புறம்பானது
ஜியோவின் இந்த பகிரங்க குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல், ஐ.யூ.சி. சார்ஜ் மூலம் ஏற்பட்டிருக்கும் பெரும் பிரச்சனையில் இருந்து ட்ராய் அமைப்பை திசை திருப்ப தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகிறது ரிலையன்ஸ் நிறுவனம் என்று அறிவித்துள்ளது