கிறிஸ்துமஸ் கேக் ரெஸிப்பீஸ்

 கிறிஸ்துமஸ் கேக் ரெஸிப்பீஸ்

ப்ளம் கேக்

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

தேவையான பொருட்கள்:- மைதா – 100 கிராம் சர்க்கரை – 100 கிராம் ஓமம் தூள் – அரை டீஸ்பூன் திராட்சை – 20கிராம் சோள மாவு – 2 டீஸ்பூன் முந்திரி-50கிராம் பிஸ்தா-50கிராம் வால்நட் – 50 கிராம் சுக்குத் தூள் – அரை தேகக்ரண்டி வெண்ணெய் – 100 கிராம் பால் – கால் கப் முட்டை – 3 செர்ரி பழம் –20

செய்முறை :- சோள மாவைப் பாலில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்கு கூழாகும் வரை வேகவிடவும். மாவில் கட்டிகள் தட்டாமல் கிளரிக்கொண்டிருக்கவும். .மைதாவைச் சலித்து சர்க்கரையைப் பொடித்து அதையும் சலித்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து கொண்டு வெண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். முட்டையை எக் பீட்டரில் போட்டு நுரை வரும் வரை அடித்து இந்த கலவையோடு சேர்த்து எல்லாவற்றையும் கேக் கலவையுடன் போட்டு கலக்கவும். பட்டர் பேப்பர் தடவிய கேக் பாத்திரத்தில் கேக் கலவையைப் பாதி ஊற்றவும். அதன் மீது துண்டுகளாக நறுக்கிய செர்ரி பழங்களைப் போட்டு அதன் மீது மீதி கலவையை ஊற்றவும். இதை மிதமான சூட்டில் மைக்ரோ ஓவனில் 40 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும். சுவையான சத்தான ப்ளம் கேக் தயார்.

2

கருப்பட்டி கேக்*

****************** தேவையான பொருள்கள்:- பச்சை அரிசி – 1/2 கிலோ கருப்பட்டி – 1/2 கிலோ ஏலக்காய் – 4 தேங்காய் – 1 உப்பு – சிறிதளவு முந்திரி – 50 கி

செய்முறை:- பச்சரிசியை பொன்னிறமாக வறுத்து ஆறிய பின் கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கருப்பட்டியை போட்டு வேகவிடவும். கருப்பட்டி தண்ணீரில் கரைந்து வந்தவுடன் மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய கரைசலில் அரைத்த பச்சரிசி மாவு, ஏலக்காய், சிறிதளவு உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கிளறவும். பிறகு கிளறிய மாவை தேவையான வடிவத்தில் பிடித்து கொண்டு தேங்காய் துருவலில் பிரட்டி ஒரு இட்லி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். ஆவி வந்தவுடன் இறக்கிவிட்டு மேலே நெய்யில் வறுத்த முந்திரியை வைத்து அலங்கரித்து பரிமாறலாம்.

3.*மாம்பழ கேக்* *

************** தேவையானப்பொருட்கள்:- மாம்பழக்கூழ் – 1/2கிலோ, பொடித்த சர்க்கரை – 1 கப், ஏலக்காய்த்தூள் – 1/2டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- ஒரு கெட்டியான பாத்திரத்தில் மாம்பழ கூழ், சர்க்கரை பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கி அடுப்பில் வைத்து 15 நிமிடம் வேகவிடவும். வெந்ததும், நெய் தடவிய தட்டில் இந்தக் கலவையைப் போட்டு பரப்பி, நன்கு ஆறியதும், துண்டுகள் போட்டு பரிமாறவும்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...