அவசியம் படியுங்கள்
அவசியம் படியுங்கள்
.
தமிழகத்தில் இன்னும் பெரும்பாலான இடங்களில் ஒரு மழை கூட பெய்யாமல் உள்ளது. இந்த 2 மாதங்கள் (நவம்பர், டிசம்பர்) மட்டுமே மழை இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 9 மாதங்கள் வறட்சி மாதங்களாகும்.
தமிழகத்திற்கு வடகிழக்குப்பருவ மழை இந்த வருடம் நவம்பர் 2 ம் தேதி துவங்க வாய்ப்புள்ளது. ஆனால் குறிப்பிடத்தகுந்த மழை டிசம்பர் 10ம் தேதி வரை மட்டுமே நீடிக்கும். இக் காலகட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சுமார் 5 முதல் 8 உழவு மழை மட்டுமே அதிகபட்சமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிலும் பொதுவாக 4-5 உழவு மழை மட்டுமே பரவலாகக் கிடைக்கும். நீண்ட வறட்சியை சமாளித்து நிலத்தடிநீர் உயர சுமார் 6 உழவு மழையாவது அடிப்படையாகத் தேவை.
செம்மண்,மணல் வகை நிலப்பகுதி விவசாயிகள் முறையாக வயலைச்சுற்றி வரப்பமைத்து பெய்யும் மழைநீரை உங்கள் வயலிலே சேமித்தால் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து கிணறு போரில் தண்ணீர் வற்றாமல் இருக்கும்.
இந்த வகை நிலங்களில் 3 நாட்கள் வரை தண்ணீர் தேங்கியிருந்தாலும் பயிருக்கு எந்த பாதிப்பும் இருக்காது.அதனால் பயமின்றி வயலில் தண்ணீரை சேமியுங்கள்.
மேலும் தண்ணீர் தேங்கி நின்றால் ஒருவேளை உப்பு அதிகமாக அதாவது அமில காரநிலை 7.5 க்கு மேல் இருந்தாலும் உப்பு அலசப்பட்டு அதன் பாதிப்பு பெருமளவு குறைந்துவிடும்.
களிமண்ணிலும் வடிகால் வசதியை உறுதிப்படுத்திவிட்டு பின்பு நீரை வயல்களில் சேமிக்கலாம்.இதனால் மண்ணில் உப்பு மற்றும் சுண்ணாம்புகளால் ஏற்படும் பிரட்சனைகள் தீரும்.
மழைநீரை அவசியம் சேமிக்கவும்.