இதுதாங்க… மருத்துவ, வியாபாரம்… உஷார்….

 இதுதாங்க… மருத்துவ, வியாபாரம்… உஷார்….

பாருங்க நாம இவ்வளவு நாள் என்ன நினைச்சோம் B.P. யின் அளவு 70-140….

70- க்கு கீழ போன Low B.P , 140-க்கு மேல போன High B.P ன்னுதான் நினைத்தோம் …

அதுக்கு மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டோம்…. இதன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் மருந்து மாத்திரை வியாபாரம் உலகம் பூரா நடக்குது….ஆனா அந்த பல லட்சம் கோடி போதாதுன்னு இப்ப இந்த B.P அளவை  மாத்தி அமைச்சி இருக்காங்க…

அதாவது இனிமே 130-க்கு மேல High B.P.., 80-க்கு கீழ இருந்த Low B.P..

இதை அமெரிக்க ஆய்வு நிறுவனம் வரையரை செய்து இருக்கு…இதன் மூலம் மேலும் 3 கோடி பேர் அமெரிக்காவில் மட்டும் கூடுதலா மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டாகணும்.அனைத்துக்கும் அமெரிக்காவை உதாரணம் காண்பிக்கும் நம்ம ஊர் டாக்டர்கள்….. இதை அப்படியே உங்கள் கிட்ட சொல்லி உங்களை B.P. நோயாளியாக மாத்துவாங்க …

பின்ன எப்படிங்க மருந்து கம்பெனிகள் கிட்ட, அதிகமா மாத்திரை மருந்து எழுதி கொடுத்ததுக்கு கமிஷன் கேட்க முடியும் …. இல்லை வெளிநாட்டு டூர், கார், னு கேட்க முடியும்..

குறிப்பு:- இது, மனசாட்சியை, விற்ற டாக்டர்களுக்கு மட்டுமே பொருந்தும்..

இதன் மூலம் இந்தியாவில் மிக அதிக அளவு BP patients உருவாக போறாங்க…

அதோட மருந்து மாத்திரை வியாபாரம் குறைந்த பட்சம் இரண்டு மடங்கு உயரும்.

வெறும் 30 கோடி மக்கள் தொகை உள்ள அமெரிக்காவில் மட்டும் 3 கோடி பேர் BP- க்கு மாத்திரைகள் வாங்கி ஆகணும்.

அப்படினா 125 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் எத்தனை கோடி புது நோயாளிகளை உருவாக போகிறார்கள் என்பதை எண்ணி பாருங்கள்.

இது BP யோடு நிற்காது.அடுத்து Sugar க்கும் அளவு மாறும் (மாறிக்கொண்டுதான் இருக்கிறது) …இந்த,மருந்து மாத்திரை ஏற்படுத்தும் பக்க விளைவுகளால் தொடர்ந்து,  பல, பல.. நோய்கள் வரும் என்பதுதான், மறக்கடிக்கப்பட்ட உண்மை.

மருந்து கம்பெனிகளின் இந்த சதிக்கு இன்னும் எத்தனை பேர் பலி ஆக போறாங்கனு தெரியலை ….இது முதல் தடவை இல்லிங்க

சில வருஷத்திற்கு முன்னாடி 150 / 60 தாங்க நார்மல் B.P ..

பின்னாடி 140 / 70 ஆக குறைந்தது …

இனி 130 / 80

அடுத்து 120 / 90 …

எவனோ எங்கயோ உட்காந்து நம்ம உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறான்…உணவே மருந்துன்னு சொன்ன நாம, அவனது, மாத்திரை மருந்து வாங்கி சாப்பிட்டு அடிமையா கிடக்கிறோம்.

எப்போது தலை நிமிர போறோம், நாம்..?.!.. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...