வரும் டிசம்பர் 20-ந் தேதி முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம்..! | நா.சதீஸ்குமார்
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரும் 16-ம் தேதி முதல் நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகித்து, வரும் 20-ந் தேதி முதல் ரேசன் கடைகளில் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண
உதவியாக ரூ.6,000 ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் வரும் 16-ம் தேதி முதல் நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன் பின் 10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டிச.20-ம் தேதி முதல் வெள்ள நிவாரண நிதி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், விநியோகிக்கப்படும் டோக்கன்களில் எந்த ரேஷன் கடைக்கு வர வேண்டும், எந்த தேதியில் வர வேண்டும், எந்த நேரத்திற்கு வர வேண்டும் என்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும் எனவும் கூறபப்டுகிறது.
இது தவிர ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண உதவித்தொகை வழங்க தமிழக அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை வெள்ள நிவாரணத் தொகை 3 பிரிவுகளாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரேஷன் அட்டை வைத்திருப்போர்,
ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போர், விண்ணப்பம் ஏற்கப்பட்டு கடை ஒதுக்கப்பட்டுள்ள நபர்கள்,
சென்னையில் பல ஆண்டுகளாக வசித்திருப்போர் உரிய ஆதாரங்களை(வாடகை ஒப்பந்தம், கேஸ் பில், ஆதார் etc) சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த பிரிவுகளின் படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.