குளம் காணாமல் போன வழக்கு:

 குளம் காணாமல் போன வழக்கு:

குளம் காணாமல் போன வழக்கு:

விழுப்புரம்: திண்டிவனம் வெள்ளிமேடுபேட்டைடியில்  கோமுட்டிகுளம் காணாமல்  போனதாக தொடரப்பட்ட வழக்கில் அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கழிவுகளை நிரப்பி குளத்தை மாயமாகி விட்டதாக வழக்கறிஞர் ஞானசேகரன் என்பவர் வழக்கு.

சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருப்பவர் எம்.ஞானசேகரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா வெள்ளிமேடு பேட்டை கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக கோமுட்டி குளம் இருந்தது.

இது என்னுடைய சொந்த கிராமம். இந்த குளத்தை, கட்டிட கழிவுகளை போட்டு, முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜதுரை நிரப்பி, குளத்தை காணாமல் ஆக்கி விட்டார். இதற்கு கிராம நிர்வாக அலுவலர், திண்டிவனம் தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்தநிலையில், குளம் இருந்த இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதாக கிராம பதிவேட்டில் தாசில்தார் திருத்தம் செய்துள்ளார். இதன்மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வந்த குளம் காணாமல் போய் விட்டது.

எனவே, குளத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்றும் குளத்தை மூடிய முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு புகார் மனு கொடுத்தும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

குளம் இருந்ததா..? இல்லையா.? என விளக்கம் அளிக்க அனைத்து ஆவணங்களுடன் அக்டோபர் 24ம் தேதி ஆஜராக ஆணை.

 

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...