முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்..! | நா.சதீஸ்குமார்

 முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்..! | நா.சதீஸ்குமார்

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 52 லட்சம் மதிப்பில்  வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று காலை 11 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்.  இந்த விழாவில், உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் குடும்பத்தினர் மற்றும் தமிழ்நாடு  அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

விஸ்வநாத் பிரதாப் சிங் எனும் வி.பி.சிங்  25.6.1931ல் அலகாபாத்தில் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியிலும்,  இதன் பின்னர் கல்லூரி படிப்பை புணே பெர்குஸன் கல்லூரியில் படித்தார். 1950-இல் அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு பயின்றார்.

காந்திய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட அவர், சர்வோதய சமாஜத்தில் இணைந்து, பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களை தானமாக வழங்கினார்.1980-இல் உத்தரபிரதேச பேரவைத் தேர்தலில் வென்று முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்து சிறந்த முதல்வராகத் திகழ்ந்தார். 1984-இல் மத்திய அரசில் நிதியமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய பதவிகளையும் வகித்தார். பின்பு, 1989-இல் நாட்டின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரதமராக இருந்தபோது தமிழ்நாடு மக்களின் வாழ்வதாரப் பிரச்னையான காவிரி நதிநீர் பிரச்னைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து தந்தார். சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணா பெயரையும் சூட்டினார்.

சட்ட மாமேதை அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்றினார். சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பி.பி.மண்டல் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையை வி.பி.சிங் செயல்படுத்தினார்.

அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்றினார். சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பி.பி.மண்டல் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையை வி.பி.சிங் செயல்படுத்தினார்.

அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிலை அமைக்கப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...